பக்கம்:ஈச்சம்பாய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஈச்சம்பாய்


நான் வால்டேர் மாணவன்...

இந்தச் சமயத்தில வால்டேரை ஏன் இழுக்கிறீங்க இளங்கோ...? அவர்தான் ரிட்டயர்டு ஆயிட்டாராமே?

“உலக மக்கள் இருக்கும் வரை எப்போதுமே ரிட்டயர்டு ஆகாத பிரெஞ்க சிந்தனையாளர் வால்டேரை சொன்னேன். 'உன் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். ஆனாலும் அந்தக் கருத்தை நீ சொல்வதற்குரிய உரிமைக்காக போராடுவேன்னு சொன்ன ஜனநாயக வாதி வால்டேர்.”

இந்தக் குழப்பத்தோட உங்க குழப்பம் வேறயா?

இதுல குழப்பத்திற்கு அவசியமே இல்ல குமுதா. அந்தத் தொலைக்காட்சி நிலையத்தோட “கண்டதும் காதல்” என்கிற நிகழ்ச்சியில கலந்துக்க உனக்கு ஆசை. எனக்கோ உடன்பாடில்லாத செயல். ஆனாலும் என்னதான் நான் காதலனா இருந்தாலும், உன் சுதந்திர உரிமையைத் தடுக்க மாட்டேன். இப்போ மட்டுமல்ல. நமக்கு திருமணம் ஆனபிறகு கூட.

‘உங்கள காதலிக்கவும் திருமணம் செய்யவும் நான் கொடுத்து வைத்தவள்.’

‘நானும்தான்’

‘நீங்களும் இந்தப் புரோகிராமில கலந்து கொள்ளுங்களேன்’

‘இப்போ நீ எனக்கு வால்டேர் ஆகணும். அதோட சாதாரண பேண்ட் சட்டை போட்டவனையே கிண்டலடிக்கிற கூட்டத்துல, இப்படி வேட்டியும் ஜிப்பாவும்மாய் இருக்கிற என்னை சகிக்கமாட்டாங்க. நீ உன் வழியில போ. நான் என் வழியில போறேன். சாயங்காலமா இதே பொது வழியில் சந்திப்போம்’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/30&oldid=1371993" இலிருந்து மீள்விக்கப்பட்டது