பக்கம்:ஈச்சம்பாய்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

29



'மறந்திடப்படாது இளங்கோ. சும்மா ஒரு சேஞ்கக்காகத்தான் போறேன்.

'நீ விளையாட்டுப்பிள்ளைன்னு எனக்குத் தெரியாதா? சரி போய் வா

குமுதா, அவனைத் திரும்பத் திரும்ப பார்த்தபடியே ஜிப்சி சிம்பாவை சுற்றிய வட்டத்திற்கு வெளியே, முட்டிக் கால்களுக்கு கீழே நிர்வாணமாய் கையில் 'பேடோடு' நின்ற ராஜியிடம் போய் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னாள். அவள் கையில் வைத்துள்ள குறிப்பேட்டில் அதைக் குறித்துக் கொண்டாள். அது முடிந்ததும், குமுதா, அந்த இளைஞர் வட்டத்திற்குள் ஊடுருவி மனிதச் சங்கிலியில் ஒன்றானாள். அவள் அந்த வட்டத்தில் கரையும் வரை, அவளையே பார்த்து நின்ற 'ஜிப்சி' சிம்பா, தோளை ஒரு குலுக்கி குலுக்கி முகத்தை ஆட்டுவது தெரியாமல் ஆட விட்டு கண்களைக் கிறங்க வைத்து, கூட்டத்தை கற்றுமுற்றும் பார்த்தாள், மனித வட்டத்திற்கு மையப் புள்ளியாய் நின்றபடியே அங்கு திரண்டு நின்ற கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாள். இந்தப் பார்வைக்கென்றே பயிற்சி எடுத்தவள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போதுகூட ஒவ்வொரு இளைஞனும் தன் மீது உரிமை கொண்டாடலாம் என்பதுபோல் இரட்டைப் பார்வையாய் பார்ப்பவள். இதனால்தான், உயர்நீதி மன்ற நீதிபதியின் ஆண்டு வருமானம், இவளது மாத வருமானம். நுனி நாக்கில் அவள் பேசும்போது, நேயர்கள் சொக்கிப் போவார்கள். மழலைத் தமிழோடு அங்குமிங்குமாய் முகமாட்டி அவள் பேசுகிற தொனி அலாதியானது. அத்தனைத் தமிழர்களையும் கட்டிப் போடக் கூடியது. இப்போதும் அதே நுனி நாக்கில், ஒன்றும் தெரியாத பாப்பா போல லேசாய் சிணுங்கியபடியே பேசினாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/31&oldid=1371908" இலிருந்து மீள்விக்கப்பட்டது