பக்கம்:ஈச்சம்பாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஈச்சம்பாய்



பேசப் பேச வீடியோ கேமரா ஒன்று கழன்றது. இன்னொரு என்.ஜி.வோ கேமரா, கூட்டத்தை லாங் ஷாட்டில் எடுத்து விட்டு அழகான பெண்களையும் ஆண்களையும், அவர்களது கிககிகப்புக்களையும் குளோசப்பில் அம்பலப் படுத்திக் கொண்டிருந்தது. சிம்பா, கேமிரா பயம் ஏதும் இல்லாமல் சரளமாகப் பேசினாள்.

ஹாய்.... பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்! உங்கள் 'ஜிப்சி' சிம்பாவோட மார்னிங் வணக்கங்கள் - ஓகே -- சப்ஜெக்ட்டுக்கு வருவோமா? 'ஜிப்சி' நிறுவனத்தின் சார்பில் தொலைக்காட்சியில நான் கொடுத்த இன்விடேஷனுக்கு இணங்கி இங்கே வந்திருக்கிற உங்களுக்கு என்னோட மெனி மெனி தேங்ஸ்.... இந்த நிகழ்ச்சி புதுமையான துங்கோ. பொதுவாக, நம்மோட மெஜாரிட்டி யங்ஸ்டர்ஸ் காதலில் ஈடுபடுறதில்லங்கோ. கேக்கிறதுக்கே கஷ்டமாயில்ல? அதுதான் பேக்ட்டுங்க -- ஆனால், ஒண்ணுங்க. அவங்க மனசுக்குள்ளேயும் ஒரு மானசீகமான உருவம். முன்பின் பார்த்தறியாத உருவம் காதலனாகவோ -- காதலியாகவோ நடமாடும். மேரேஜ் ஆன பிறகும், இவங்க இந்த மானசீக உருவத்தோட குடித்தனம் நடத்துவாங்க. இதனால கட்டுனதுக்கிட்டயும் பேசமுடியாம மனகக்குள்ள எட்டுனதுக்கிட்டயும் பேசமுடியாம டிஸ்டர்ப் ஆவாங்கோ.... இந்த மாதிரி எங்ஸ்டர்ஸ்க்கு, பாசிட்டிவ் சான்ஸ் கொடுக்க வந்திருக்கோம். இது ஒரு சமூக டூட்டி என்கிறதுல பெருமை படுறோம். இங்கே கூடியிருக்கிற நீங்கெல்லாம் இதுவரைக்கும் காதல் அனுபவம் இல்லாதவங்கதானே? சொல்லுங்கோ? இல்லாதவங்களா? ஓகே. ஓகே. இங்கு வந்திருக்கக் கூடிய ஒங்கள ஆண் பெண்ணா ஜோடி சேர்க்கப் போறோம். மகாபலிபுரத்துக்கு கூட்டி போறோம். அதுக்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/32&oldid=1371997" இலிருந்து மீள்விக்கப்பட்டது