பக்கம்:ஈச்சம்பாய்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

31



உங்களுக்கு காதல் வந்துட்டால், டெர்மினல் இடத்துல சொல்லுங்கோ. இப்படி கண்டதும் காதல் இன்றைய சமுதாயத் தேவைங்கோ. உங்களுக்கும் உங்களோட பைக்ல வருகிற பார்ட்னருக்கும் லவ் உண்டானால் எனக்கே லவ் உண்டானது மாதிரி. சும்மா ஒரு ஜோக்குக்குத்தான். ஆனாலும் புதுக் காதலர்கள உருவாக்கின புண்ணியம் எங்களுக்கு கிடைக்குங்கோ. -- அதனால பைக்ல போற உங்களோட பார்ட்னருக்கும் உங்க மானசீக உருவத்துக்கும் பொருத்தமாக இருக்குதான்னு பார்க்கப் போறீங்க. அப்படிப் பொருந்திப் போன ஜோடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒரு ஜோடியை மலேசியாவிற்கு அனுப்பப் போறோம். அந்த ஜோடியை அந்த நாட்டுலயே வெல்கம் பண்றதுக்கு நம்மோட யுனிவர்ஸல் ஸ்டார் கமல்நாத் குமார் தயாராய் இருப்பார். அந்த ஜோடியைப் பேட்டியும் காண்பார். இந்தப் பேட்டி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக ஒளிபரப்பாகும். இன்னொரு ஹேப்பி சமாச்சாரங்கோ. மலேசியா போகுறதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கபுள், தேவைப்பட்டால் அந்த நாட்டுல ப்ரீ ஹனிமூன் - டமிள்ல அதுக்கு என்ன பேரு - வாட்ட ஹனிமூன்னா தேன் நிலவு. அதுக்கு முந்தினது... பால் இரவா? குட் சொன்னவருக்கு தேங்ஸ் பால் இரவுக்கு ஏற்பாடு செய்வோம்... அதனால இந்த நிகழ்ச்சியை சீரியஸா எடுத்துக்கணும். இந்தப் போட்டிக்குரிய கண்டிஷன்கள நம்மோட... சாரி உங்களோட ராஜி தெரிவிப்பாள்.

ஸ்கர்ட் ராஜி மார்பகத்தைக் குலுக்கியபடியே அந்த வட்டத்திற்குள் வந்தாள், இரண்டு கைகளையும் உயரத் தூக்கி ஓரடி உயரத்துக்கு குதித்தாள். பிறகு, காலை அங்கும் இங்குமாய் ஆட்டினாள். இரண்டு கைகளில் பிடிபட்டு கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/33&oldid=1371905" இலிருந்து மீள்விக்கப்பட்டது