பக்கம்:ஈச்சம்பாய்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

33



தனியாக நின்ற இந்திக்கார வாணியிடம் ஒப்படைத்தாள். அவள் மார்பைப் பிளப்பதுபோல் பின்பக்கமாய் வளைந்து நெஞ்சை உயர்த்தி, உரத்துக் குரலிட்டாள்.

'தங்காத்துரை - அண்டு லலிதா- ஹை'

ஒரே கைதட்டல். லலிதாவும், தங்கத்துரையும், சிம்பாவுக்கு அருகே போய் நின்றார்கள். சிம்பா, இருவரையும் ஒருவர் பக்கம் ஒருவரைத் தள்ளி விட்டாள். உடனே பலத்த கைதட்டல், அதைப் பார்த்து சிம்பாவே வாயில் கையை வைத்து உய், உய் என்று விசிலடித்தாள். என்றாலும் சிவப்பியான லலிதாவுக்கு கறுப்பன் தங்கத்துரையைப் பிடிக்கவில்லை. ஆனாலும் அழகற்ற கணவனை, அவன் சம்பளத்திற்காக பொறுத்துக் கொள்வது போல், இவளும் மலேசியப் பயணத்திற்காக பொறுத்துக் கொண்டாள். இரண்டாவது ஜோடியான நவீனுக்கு முன்பல் நீண்ட காந்தாவைப் பிடிக்கவில்லை. ஆனாலும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் மணமகளை கட்டிக் கொன்ளும் அடக்கமான மாப்பிள்ளைபோல் அவன் அடங்கி நின்றான்.

குமுதா தனக்கு வரப்போகும் ஜோடியைப் பற்றி துளிகூட கவலைப்படவில்லை. வெறுமனே மாமல்லபுரம் மட்டும் வரையான அட்வென்சர். லைப் அட்வென்சர் அல்ல. கெழவனர் இருந்தாலும் ஓ.கே.தான்.

நடுக்கட்டத்தில், 'ஹாய்! -- குமுதா... பாண்டியன் என்று சூரியா குரலிட்டபோது, ஆண் பெயருக்குரியவன் நடந்தபடியே 'நோ பாண்டியன். அயாம் பாண்டியா... நாட் பாண்டியன்' என்று அட்டகாசமாகச் சிரித்துச் சொன்னான். கூட்டத்தினரின் கைதட்டலோடு, பாண்டியாவும் குமுதாவும் ஏற்கனவே ஜோடி சேர்ந்து நின்றவர்கள் பக்கம் போய் நின்று

ஈ.3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/35&oldid=1371930" இலிருந்து மீள்விக்கப்பட்டது