பக்கம்:ஈச்சம்பாய்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

35



முதுகில் அணைத்தபடியே நடந்துகொண்டிருந்தான். குமுதாவிற்கு மூடு வருவதுபோல் இருந்தது. பாண்டியாவை இளங்கோவாக அனுமானித்துப் பார்த்தாள். அவன் தான் இப்போது அவளை அழைத்துச் செல்வதுபோல கற்பித்துக் கொண்டாள். ஆனாலும் அந்தக் கரடு முரடுச் சாலையின் ஒரு பள்ளம் கட்டி, அவள் பாண்டியாவின் முதுகின் மேல் தூக்கிப் போடப்பட்டபோது கதாரித்துக் கொண்டாள். இவன் இளங்கோ அல்ல... இவன் அன்னியன்.. நான்கு மணி நேரக் கூத்தின் நடிகன்... அவ்வளவேதான்...

ஆனாலும், சிறிது நேரத்தில், பாண்டியாவின் ஒற்றைக்காது வளையம் எதிர் திசைக் காற்றாலும் அவன் வண்டியை அங்குமிங்கும் திருப்புவதாலும் ஊஞ்சலாய் ஆடுவதைக் கண்டதும் சிரிப்பு தாளமுடியவில்லை. அந்த வளையத்தைத் தொட்டுப்பார்க்கக் கூட ஆசை.... ஒரு விரல் உள்ளே போய்விடுமா என்று யோசித்தாள்... ஆன்காட்டி விரலை, அதன் அருகே கொண்டுபோய் விட்டாள்.. அவள் கை கழுத்தில் பட்டு, திரும்பிய பாண்டியா 'ஹாய்' என்றான். அவன் சிரிப்பும், அந்தத் தோரணையில் அந்த வளையம் ஆடிய ஆட்டமும், இவளை ஆட்டுவித்தது. எவ்வளவு உயரம்... எவ்வளவு கம்பீரம்... அந்த வளையம்கூட அந்தக் கம்பீரத்த எடுத்துக்காட்டுறது போல இல்ல? இந்த இளங்கோவும் இருக்கானே -- எப்பவோ கடுக்கன் போட்டானாம் -- அவன் காது துளையை பார்க்க சசிக்காது -

குமுதா திடுக்கிட்டாள். தன் எண்ணத்தை மாற்றுவதற்காக முகத்தை நிமிர்த்தியவளுக்கு, பாண்டியாவின் முதுகு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிபோல் தெரிந்தது. பல்வேறு டிசைன்கள் போட்ட சட்டை. டிவி. பெட்டியில் வருவது போன்ற தடங்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/37&oldid=1371934" இலிருந்து மீள்விக்கப்பட்டது