பக்கம்:ஈச்சம்பாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

41


குமுதாவின் மனம் அவனால் ஜில்லிட்டதா? அல்லது அந்த பானத்தால் ஜில்லிட்டதா என்று திண்டுக்கல் லியோனியால்கூட சொல்ல முடியாது. அப்படிப் பட்ட ஜில்லு. வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஜில்லு...

அந்தக் குளிர்காற்றிலும், வியர்த்துக் கொட்டுவதுபோல் பாண்டியா தனது சட்டைப் பொத்தான்காளை தொப்புள் வரைக்கும் கழட்டி விட்டான். செம்மண் நிலத்தில் பசும்புல் முளைத்ததுபோன்ற மார்பு- அதில் டாலர் செயின் டாலடித்தது. அதைத் தூக்கித் தூக்கிப் போட்டு பிடித்தபடியே, பாண்டியா அவள் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தபடியே கேட்டான். எப்பா எப்பேர்ப்பட்ட கண்ணு...

‘ஒன்ன ஸ்கூட்டர்ல கொண்டுவந்து விட்டானே... ஒரு இம்போட்டண்ட் பெல்லோ... அதான் ஒம்போதுமாதிரி.... அவன் யாரு? உன் காதலனா?’

குமுதா, பாண்டியாவை ஒய்யாரமாகப் பார்த்தபடியே அவசர அவசரமாய் பதிலளித்தாள். ‘நோ... நோ... அவன் எங்க பெரியம்மா மகன்’ குமுதா, இப்போது, அவன் தோளைப் பிடித்தபடியே வண்டியில் ஏறினாள்.

- வாசுகி - தீபாவளி மலர் - 1998
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/43&oldid=1371921" இலிருந்து மீள்விக்கப்பட்டது