பக்கம்:ஈச்சம்பாய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஈச்சம்பாய்


நடுவில் தம்பி முத்துவேல்.... அவனுக்கு இருபக்கமும் மாமன் மகன்கள்... ச்சீ... இந்தப்பயல்களா மாமன் பையன்கள்... இடது பத்தியில் கவரோடு ஒட்டிப்போட்ட ஒரு சாய்வு நாற்காலியில் மதயானை படுத்திருப்பதுபோல் அத்தைக்காரி- இவள் அத்தை இல்லை... தாய் மாமனோட பொண்டாட்டி... எந்த இரத்தக் கலப்பும் இல்லாத ஊடுறுவல்காரி... அவளருகே கோவில் தூண்போல், கடைந்தெடுத்த தேக்குத் தூணை, முத்துவேலின் முகமாக நினைத்து, முகம்போட்டு நிற்கும் பாப்பா... இயற்கைப் பெயர் என்ன இழவோ... இட்ட பெயர் போய், இட்டுக் கட்டிய பெயர் நிலைத்து விட்டது... உருண்டு திரண்ட அந்தத் தூணைப்போல உடற்காரி.... வழியில் போகிறவர்களை அவர்கள் தன்னைத் திரும்பிப் பார்ப்பதுவரைக்கும் நோண்டிப் பார்ப்பவள்.. இந்த ஊரில் குழாய்ச் சட்டை போட்ட முதலாவது பெண்... நைட்டுக்கவுனாமே... அதைப் பகலிலும் போட்டுத் திரிகிறவள்... அசல் மான்குட்டி... இல்லை இல்லை. பைபிள் சொல்வதுமாதிரி அசல் விரியன் பாம்புக் குட்டி... இவளுக்கும் மாமியாருக்குமிடையே வாயுத் தொல்லையாலோ, அல்லது வீட்டுக்காரர் தொல்லையாலோ வயிறு துருத்திய முத்துக்கனி... ஆனாலும் பார்வையில் லட்சணம்... பார்ப்பதற்கும் லட்சணம்... மாமனுக்குப் பிறந்த பெரியதடியனின் மனைவி.... பாம்போ ... பழுதோ அறியான்...

மாரிமுத்து, எதிர்திசைக்காரர்களை இளக்காரமாய்ப் பார்த்தபோது, ஊஞ்சல் பலகையின் கால்களை ஊன்றி ஊன்றி அதை ஆடவிட்டு ஆடிக் கொண்டிருந்த மூவரும் அப்படியே எழுந்தார்கள்.... சாய்வு நாற்காலியம்மா, ‘அடப்போடா’ என்கிறமாதிரி வெத்திலையை குதப்பிக் கொண்டிருந்தான். பாப்பா பயந்து போனவளாய் அம்மாவின் அருகே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/46&oldid=1371935" இலிருந்து மீள்விக்கப்பட்டது