பக்கம்:ஈச்சம்பாய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

45


சாய்வு நாற்காலியைப் பிடித்துக் கொண்டாள்.... அந்த கிழட்டுக் குழந்தையை, இவள் - இந்தப் பாப்பா, தள்ளுவண்டியில் தள்ளப் போவதுபோல் தோன்றியது... முத்துக்கனி மட்டும் எழுந்து, ‘உட்காருங்க அண்ணாச்சி’ என்றாள்... ஆனால் மாமியார்க்காரியோ, மருமகளை எரிச்சலாய்ப் பார்த்துவிட்டு ஊஞ்சல் ஆசாமிகளுக்கு ஆணையிட்டாள்....

உட்காருங்கடா... மருமவனே... ஒங்கள யுந்தான்.... உட்காருங்க... எல்லாம் நான் எதிர்பாத்ததுதான்...

மாமன் மகன்கள் உட்கார்ந்தார்கள்... நடுவில் தயங்கி நின்ற முத்துவேலையும் ஆளுக்கொரு கையாக இழுத்து ஊஞ்சல் பலகையில் உட்கார வைத்தார்கள்.... ஆனாலும் ஊஞ்சலை அவர்களின் எடைக்கு தாக்குப் பிடிக்காமல் ஆடப்போனதையும் முன் கால்களை நீட்டி தரையில் அழுத்தி தடுத்துக் கொண்டார்கள்...

மாரிமுத்து, ஊஞ்சல்காரர்களை கோபம் தணியாமல் ஒருசேரவும், தனித்தனியாகவும் பார்த்தான்.. வலது பக்கத்துத் தடியன் இவன் வயதுக்காரன்.. பட்டுச் சட்டையின் மூன்று பட்டன்களைத் திறந்து போட்டு தங்கச் செயினின் டாலரை தூக்கி, தூக்கிப் போட்டு பந்தாடினான். இடது பக்கத்துக்காரன் தம்பி முத்துவேலைவிட ஒரு வயது பெரியவன்... அதே சமயம் ஒரு வகுப்புக்குக் கீழே படித்தவன்... அண்ணன் சூரன்... தம்பி சூதன்... நடுப்பக்கம் ஊஞ்சலில் பட்டும் படாமலும் விட்டத்தைத் தூக்கியபடி, இருந்த கோலத்தை நின்ற கோலம்போல் தோற்றுவித்த முத்துவேல் ஜீன்ஸில் கிடந்தான்.... அவன் உடைக்குள் இன்னொரு ஆளைத் தூக்கிப் போடலாம்... அச்சடித்த அதுவும் டி.டி.பி. போட்டது மாதிரியான தெளிவான முகம்.... அளவான அவயங்கள்... மாரிமுத்துவால் தம்பியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/47&oldid=1371940" இலிருந்து மீள்விக்கப்பட்டது