பக்கம்:ஈச்சம்பாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஈச்சம்பாய்


கோபமாகப் பார்க்க முடியவில்லை... நாலு முழ வேட்டியையும், நொந்து போன சிலாக்கையும் கட்டிக் கொண்டு படித்துவிட்டும், வேலையில்லாமல் ஊரில் பரட்டைத் தலையனாய் திரிந்த தம்பியை இப்படி நாகரீகமாகப் பார்த்ததில் அந்தச் சமயத்திலும் அவனுக்கு பெருமையாகத்தானிருந்தது...

‘பாத்தியளா... என் தம்பியை!’ என்பது மாதிரி அங்கே இருந்த எல்லோரையும் தோரணையாகப் பார்த்தான்... அவர்களைப் பார்க்கப் பார்க்க, இவன் பார்வை அனலைக் கொட்டியது.. வாய் அசிங்கமாகப் பேசப் போனது. மூன்றாவது கட்டில் உள்ள சமையலறையிலிருந்து, பலகாரங்களைக் கொண்ட பெரிய வட்டத் தட்டை, இரண்டு கைகளிலும் ஏந்தி வந்த, அத்தைக்காரியின் தங்கச்சி மகள், மாரிமுத்துவைப் பார்த்ததும், அச்சப்பட்டு பின்வாங்கினாள்... வரலாற்று உண்மை தெரிந்தவள்...

மாரிமுத்து ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொருவராய்ப் பார்த்து இளக்காரமாய்க் கேட்டான்.

என் தம்பிய வளச்சிப்போட திட்டம் போட்டுட்டீ.... ஆனா அதுதான் நடக்காது... டேய் முத்துவேலு! எழுந்திரிடா...

அத்தைக்காரி, உடம்பில் ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் யாருக்கோ சொல்வதுபோல் சொன்னாள்...

‘நாங்க ஒண்ணும் வளைச்சிப் போடல... அப்பிடிப் போட்டாலும் ஊரான் பிள்ளையப் போடல... என் நாத்துனார் மகனத்தான்...

‘ஒங்ககிட்ட எனக்கு பேச்சில்லைட வாடா தம்பி, வீட்டுக்குப் போகலாம்.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/48&oldid=1371943" இலிருந்து மீள்விக்கப்பட்டது