பக்கம்:ஈச்சம்பாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

49



ஒனக்கு, ஒரு பெண் வீட்டிலேருந்து துப்பு வந்திருக்குடாநல்ல இடம்டா.. எழுந்திரிடா...

எனக்கு கல்யாணம் எதுவும் வேண்டாம். எந்த நேரத்துல நடத்தணுமுன்னு...

முத்துவேல், அண்ணனிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் பேசத்தான் நினைத்தான்... அப்படிப் பேசும் போது அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே பேச வந்த வார்த்தைகள் நாவோடு ஒட்டிக் கொண்டன... அப்போது பார்த்து அத்தைக்காரி குத்தலாய்க் கேட்டாள்.

'கல்யாணம்.... பொல்லாத கல்யாணம்... தகப்பன் இல்லாத பிள்ளையை ஐந்தாறு லட்ச ரூபாய்க்கு விற்கிற கல்யாணம்... அந்தக் கணக்கு... இந்தக் கணக்குன்னு காட்டி அந்த ரூபாயையும் அமுக்குற கல்யாணம்...

ஒன்ன மாதிரி நான் ஒண்ணும் கூட்டிக் கொடுக்கிற வம்சம் இல்லை ....

'இந்தாப்பா மரியாதையாப் பேசு... என் பையன்களுக்கு கோபம் வருமுன்னே போயிடு...

'கோபத்தையும் பாத்துடலாம்...

'டேய் கடைசியாக் கேக்கேன்... வாரியா இல்லியா...

இப்போ வரமாட்டேன்...

'அப்படின்னா. ஒன்னை உதைச்சு தூக்கிக்கிட்டு போவேண்டா'

பெரிய மாமா பையன் சூளுரைத்தான்.

'வரமாட்டேன்னு சொல்றவர, தூக்கீட்டுப் போறதுக்கு அவர் என்ன ஆட்டுக் குட்டியா?.... அதைப் பார்த்துட்டு சும்மா நிக்கிறதுக்கு.... எங்க கையி வளையல் போடல...' ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/51&oldid=1371942" இலிருந்து மீள்விக்கப்பட்டது