பக்கம்:ஈச்சம்பாய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

51


 புரியவில்லை ... அத்தைக்காரி... 'அய்யய்யோ .... அய்யய்யோ .... என்று அரற்றியபடியே மகளையும் இழுத்துக் கொண்டு மூன்றாவது கட்டின் முதலறைக்குள் போய் கதவைத் தாழிட்டாள்.

பின்னர் சன்னல் வழியாக மகன்களை கூக்குரலிட்டாள்...

'ஓடி வாங்கடா... அண்ணன் பாடு.... தம்பி பாடு...' என்று உஷார்படுத்தினாள்... அவர்களும் தாய் சொல்லைத் தட்ட விரும்பாமல், திரும்பாமல் பின்பக்கமாய் ஒரு அனுமானத்துடன் ஓடி, அம்மா இருந்த அறைக்குள் கதவில் சாய்ந்தபோது, அவள் அந்தக் கதவை வேக வேகமாய்த் திறந்து, அதே வேகத்தில் மூடினாள்... முத்துக்கனி மட்டும் தரையில் மெழுகுவர்த்தியாய் உறைந்து நின்ற முத்துவேல் பக்கம் போய் நின்றாள்... மாமியார்க்காரி பேகவதை திரும்பிப் பாராமல் கேட்டுக் கொண்டிருந்தான்...

'ஏய் முத்துக்கனி.- உள்ளே வா. இல்லன்னா அந்தப் பக்கமா ஓடிப் போ... பாவி மொட்டை எந்த நேரத்துல முழுகாம ஆனாளோ எல்லாமே முழுகுது.. இந்தாப்பா மாரிமுத்து! ஒன் தம்பிய வெட்டனுமுன்னா, வெளியில கொண்டு வெட்டு... ஒனக்கு கோடிப் புண்ணியம்... இந்தாப்பா முத்துவேலு! நாங்க ஒண்ணும் உன்ன வெத்தில பாக்கு வச்சு கூப்பிடல... ஒனக்கு இங்க வேலையுமில்ல... வெளியில போ... வெளியில போயி ஒங்கண்ணன நீ வெட்டு... இல்ல அவன் உன்னை வெட்டட்டும்... அந்தச் சமயம் பார்த்து, பாப்பாவும் குரல் கொடுத்தாள். 'அண்ணி , இங்க வாங்க... ஓடிவாங்க.... அவங்க எப்படியும் போகட்டும்...'

மாரிமுத்து, அரிவாளை இப்போது ரெண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, நிலை குலைந்து நின்ற முத்துவேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/53&oldid=1371944" இலிருந்து மீள்விக்கப்பட்டது