பக்கம்:ஈச்சம்பாய்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

55



'ஏலே... பேடிப்பயல்களா.. வெளியில வாங்கடா.... ஒங்கல ஒண்ணும் செய்ய மாட்டேண்டா. என் தம்பியால... என்னை வெட்ட முடியலையாம்.. நீங்களாவது வந்து வெட்டுங்கடா.. அவனையாவது வெட்டச் சொல்லுங்கடா... ஏன்னால்... அவன் ஒங்க சொல்லத்தான் கேட்பானாம்...

மாரிமுத்து, பொங்கிவந்த விம்மலை வெளிப்படுத்தப் போன வாயை ஒரு குத்துக் குத்தி நிறுத்தினான். ஆனாலும் அந்த அதிர்வில் கண்களில் திரண்டு நின்ற நீர்த் தாரை தாரையாய் அருவிப் பெருக்காய் உருண்டது.. அவன் திரும்பி நடந்தான்... அவன் தோளில் ஒரு கை பட்டது. முத்துவேலின் கை... இப்போது மாரிமுத்து மனம்விட்டு, வெட்கம்விட்டு தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதான்.

முத்துவேல் அண்ணனை மார்போடு தாங்கி, தோளோடு சேர்த்து, அவனை நகர்த்து நகர்த்தி திரும்பிப் பாராமல் அந்த வீட்டைவிட்டு திரும்பிப்பாராமல் வெளியேறினான்.



- தினபூமி - தீபாவளி மலர் - 1997
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/57&oldid=1371949" இலிருந்து மீள்விக்கப்பட்டது