பக்கம்:ஈச்சம்பாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

57



போட்டுக் கொண்டு, போன மாதம், இன்னொரு அலுவலகப் பொருளாளன், வங்கியிலிருந்து சம்பள நோட்டுக்களை வாங்கி வந்து, கால்குலேட்டரில் போட்டுப் பார்த்ததில், கணக்கு சரியாய் இருந்ததையும், பட்டுவாடாவில் பற்றாக்குறை ஏற்பட்டதையும் பார்த்துவிட்டு அசந்தானாம்... பிறகு அத்தனைபேரின் சம்பளத்தையும் வாங்கி, நம்பர்படி அடுக்கிப் பார்த்தால் மகாத்மா காந்தி படம் போட்ட பல நோட்டுக்களை காணலியாம்.

முரளி மேற்கொண்டும் விலாவாரியாக விளக்கியபோது, மீனா மட்டுமே அவன் பேசுவதை, முகநயங்களோடு கேட்டாள். மற்றவர்கள், அவன் பேசுவதைக் கேட்பதுபோல் பாசாங்குத் தனமாய் தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தனர். இன்ஸ்டால்மென்ட் புடவை வியாபாரியைப் பார்த்த மல்லிகா, கட்டிய புடவை நழுவிப் போனதுபோல் தவித்தாள். மாதச் சீட்டுக்காரனைப் பார்த்த சிங்காரம், தானே ஏலத்தில் போகப் போவதுபோல் தவித்தான். அப்பளம், மிளகு, முறுக்கு, வடை, மிக்ஸர், அவரை, துவரை போன்ற நொறுக்குத் தீனி வியாபாரியை பார்த்த மாரியம்மா கண்களை மூடினாள்; திறந்தால் கண்ணீர்! எந்த வியாபாரியிடம் சிரித்து சிரித்து வாங்கினாளோ, அந்த வியாபாரியைப் பார்த்து, இந்த துப்புரவுத் தொழிலாளி அழப் போனாள். ஒவ்வொரு லெவலுக்கும் ஒரு துக்கம். இதில் மகாப் பெருந்துக்கம் டிரைவர் மணிக்குத்தான். மேலதிகாரியுடன் போய்விட்டு, திரும்பி வந்து பார்த்தால், அவன் மனைவி அலமேலு காசாளன் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு இருந்தாள்.

காசாளன், ஒவ்வொருத்தரையும் சீனியாரிட்டிபடி, சம்பளப் பணத்தை கொடுக்க கூப்பிட்டான். கணக்காளரான அக்கவுன்டன்ட் மீரா, கருக்கெழுத்தாளப் பெண் மல்லிகா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/59&oldid=1371954" இலிருந்து மீள்விக்கப்பட்டது