பக்கம்:ஈச்சம்பாய்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஈச்சம்பாய்


நாற்பது வயது மீரா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

‘வீட்டுக்கு வீடு மூடில்லதான்’ என்று சொல்லிச் சிரித்தாள். வெறுமையோ... பொறுமையோ...

அலுவலகத்திற்கு அருகேயே உள்ள தன் வீட்டிற்கு பொடி நடையாய் நடக்கப் போன மீனா, நின்ற இடத்திலேயே நின்றாள். அதோ வருகிறதே ஆட்டோ, அதில் போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாமா? அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமா....

எப்பேர்ப்பட்ட அப்பா. பெண்டாட்டி செத்தால், புருஷன் புது மாப்பிள்ளை என்கிற பழமொழி இருக்கிற நாட்டுல. நாற்பது வயதிலேயே மனைவியை பறிகொடுத்தாலும், மறுமணம் செய்யாத பெருந்துறவி. பெத்த மகள்கள் முப்பது வயதைத் தாண்டினாலும், அவர்களின் வருமான வரவு களுக்காக, திருமணங்களைத் தள்ளிப்போடும் கரண்டல் தந்தையர் உலகில், இவர் அத்திப்பூ தந்தை..

‘இப்போ எதுக்கு கல்யாணம்’ என்று இவள் மறுத்தபோது, ‘நல்ல பையன். நல்ல லட்சணம்... நல்ல வேலை... அதோட வரதட்சணை வேண்டாமுன்னு சொல்கிற முற்போக்கு வாலிபன். இப்படிப்பட்டவன் எங்கேயும் கிடைக்க மாட்டான். இந்த வீட்டுச் கமையே எனக்கு சுவை. நீ சுமக்கப்படாது’ என்று அறிவுறுத்தியவர்.

பையன், நல்லவன் என்கிற சாக்கில், கையைக் கட்டிக் கொண்டிருக்காமல், இருபது பவுன் நகை போட்டவர்.... கல்யாணச் செலவை ஏற்றுக் கொண்டதோடு, கட்டில், பீரோ இத்யாதிகளை வாங்கித் தந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/66&oldid=1372011" இலிருந்து மீள்விக்கப்பட்டது