பக்கம்:ஈச்சம்பாய்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஈச்சம்பாய்



அந்த வீட்டு வளாகத்தில் நுழைந்த மீனா, இரண்டாவது பத்தியில், உள்ள தன் வீட்டு வாசலில், 'அவர் நிற்பதைப் பார்த்தாள். ஓடிப்போய், அவர் கையைப்பிடித்துக் கொண்டாள், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, குதிகாலில் நின்றபடியே, அவன் மோவாயில் வாய் பதித்தாள். அவனை உள்ளே தள்ளிக் கொண்டு போய் கட்டிலில் தள்ளினாள். 'என் கண்ணை நம்பலாமா?' என்று சொன்னபோது, அவன் ஆமாம் என்பதுபோல், அவளை இழுத்து மார்பில் போட்டுக் கொண்டு விளக்கமளித்தான்.

"இன்னிக்கு 'பே டேயா...' ஈவினிங் காலேஜ் ஏழு மணிக்குத்தான் துவங்கும்... அப்புறம் சம்பளம் வாங்கிட்டியா?”

அவள், மார்பைத் தட்டிக் காட்டியபோது, அவன், அந்த மார்பகத்திற்குள் கைவிட்டு, ஒரு கவரை எடுத்தான். அதன் நுனியைக் கிழித்து, காகிதங்களை எண்ணினான். பிறகு, அவளை மென்மையாய் அப்புறப்படுத்திவிட்டு, பீரோமேல் உள்ள கால்குலேட்டரை குடைந்தான். குழைவாகத்தான் கேட்டான்:

"என்ன மீனு! கணக்குப்படி உனக்கு மூவாயிரத்து இருபது ரூபாய் வரணும். ஆனால், அறுநூறு ரூபாய் குறையுது.

"அதுவா.. எனக்கு நல்ல வேலையாய் கிடைச்சதுக்கு... ஆபீஸ் சினீயர்களுக்கு இன்னிக்கு ஸ்வீட், காரம் வகையில நூறு ரூபாய் செலவு! எனக்கு நல்ல மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு நாளைக்கு அவங்களுக்கு லஞ்ச், அது ஐநூறு ரூபாய்.. ஆக மொத்தம் அறநூறு ரூபாய்...

"பேசறத தெரிஞ்சுதான் பேசறியா?"

“எப்பவுமா இப்படி செலவழிக்கப் போறேன்? இந்த மாதம் மட்டும்தானே. இன்னைக்கு காலேஜுக்கு முழுக்கு போடுங்க! பிச்சர்.... இல்லாட்டா பீச்கக்குப் போயிட்டு வருவோம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/68&oldid=1372013" இலிருந்து மீள்விக்கப்பட்டது