பக்கம்:ஈச்சம்பாய்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

பொருள், இன்பம், வீடு அடைதல் அதன் பயன்' என்பது நமது நெடிய மரபின் ஆணிவேர்க் குரலாகும். அம்மரபைத் தழுவி வையத்தைப் பாலித்திட எழுதுகோல் ஏந்திப் பயன்பாட்டு இலக்கியங்களைப் படைத்து வருபவர் நண்பர் சமுத்திரம்.

கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிச்சல்!

காலில் விழும் பண்பாட்டுச் சீரழிவைக் கான்றுமிழும் நெஞ்சுரம்!

மனிதமனத்தின் மென்மையை மேன்மையை ஈரங்கசியும் இழைகளோடு எடுத்துக்காட்டும் நுட்பம்!

நெஞ்சிலுற்றதைச் செய்கையில் நாட்டும் நேர்மை!

வெள்ளைக்கருப்பு

இப்பண்புகளின் ஒட்டுமொத்தமே சமுத்திரம் என்னும் படைப்பாளி. இவர் 'வெள்ளை வெளேரென்ற கருப்பு மனிதர்'! பூசிமெழுகாமல் ஒளிவுமறைவின்றித் தனக்குச் சரியெனப் பட்டதைப் பலர் நடுவே சாற்றும்போது, இவர் வெள்ளை மனிதர்! ஒடுக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர்களாகிய 'பாவப்பட்ட மனிதர்கள்' பக்கம் சார்ந்து நின்று குரல் கொடுப்பதால் இவர் கருப்பு மனிதர்!

பல்லாண்டுகள், நடுவண் அரசில் பணியாற்றிய எழுத்தாளர் இவர். தன் கதைகளில் அலுவலகச் சூழலைக் காட்சிபடுத்தும் வகையில் நேர்த்தியாகப் படம் பிடித்து வருகிறார். சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற 'வேரில் பழுத்த பலா'விலிருந்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'ஈரத்துணி' உள்ளிட்ட பல கதைகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

'அலுவலகப் பவுர்ணமி நாள்' ஆகிய சம்பள நாளின் பரபரப்பும், கந்துவட்டிக்காரன், இன்ஸ்டால்மென்ட் புடவை வியாபாரி, மாதச் சீட்டுக்காரன், நொறுக்குத் தீனி வியாபாரி எனப் பலரின் படையெடுப்பும், சம்பளத்தில் பலவகையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/7&oldid=1495088" இலிருந்து மீள்விக்கப்பட்டது