பக்கம்:ஈச்சம்பாய்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஈச்சம்பாய்



தோணி இருக்குது பாரு. பேங்க்ல வாங்குற கடனுக்கு டிவி', டூ இன் ஒன்' வாங்குறதாய் ரசீது கொடுக்கிறது பெரிய விஷயமில்ல... எனக்குத் தெரிஞ்ச கம்பெனி இருக்குது. ஐந்து சதவிகிதம் கமிஷன் கொடுத்துட்டால், சூப்பர் கம்ப்யூட்டர வாங்கின தாக்கூட ரசீது கொடுப்பாங்க. பேங்க்கு ரசீதை காட்டினா போதும். 'டிவி' வாங்க வேண்டாம்... இதுல கிடைக்கிற இருபதாயிரம் ரூபாய்ல உன் தாலி கடனையும், கல்யாண செலவுல பாதிக் கடனையும் அடைச்கடலாம்! அப்புறம் இருக்கவே இருக்குது. 'பே கமிஷன்.' உனக்கு சம்பளத்துலயே ஆயிரத்து ஐநூறு கூடும்! எதுக்குமே திட்டம் போடணும்! திட்டம் போட்டு செய்யற எந்த காரியமும் சக்சஸ்தான்..."

கட்டியவன், மாலைநேரக் கல்லூரியின் நினைப்பில், கட்டப்பட்டவளை கட்டிலில் மல்லாக்கப் போட்டான். அவள் குப்புறப் புரள்வதைப் பார்க்காமலே எழுந்து பீரோவைத் திறந்தான். இன்னொரு சாவி எடுத்து, அதன் உள் அறையைத் திறந்து, மீனாவின் சம்பளக் கவரை வைத்துவிட்டுப் பூட்டினான்.

அவனுக்கு மீனாவிடம் சொல்லிக் கொள்ளக்கூட நேரமில்லை. கல்லூரிக்கு நேரம் தவறாமல் போகிறவன்.. அதற்காக ஐநூறு ரூபாய் அவார்ட் வாங்கப் போகிறவன். அதோடு, சுவையான பாடம். எம்.பி.ஏ., மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன். அதாவது வணிகத்தனத்தில் பட்ட மேற்படிப்பு--


- தினமலர் - தீபாவளி மலர் 1997
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/70&oldid=1372008" இலிருந்து மீள்விக்கப்பட்டது