பக்கம்:ஈச்சம்பாய்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டக் கூடாத கடிகாரம்


மீனாட்சி, வீட்டுக்கு வெளியே, காலிங் பெல்லை அழுத்தி அழுத்திப் பார்த்து அலுத்து, மின்சாரக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து, கதவைத் தாம் தூம் என்று தட்டினாள். அது வாசலுக்கு மூடியாகவே இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒருவேளை உள்ளே மனிதக் கோளாறோ என்று சந்தேகப்பட்டு, கதவில் பொருந்தியுள்ள லென்ஸ் மாதிரியான வட்டக் கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு, பின்னர் காலிங் பெல்லையும், கதவையும் அழுத்திப் பிடித்தும், அழுத்தமாய் அடித்தும் அல்லாடிக் கொண்டிருந்தபோது, லட்சுமி மாமி, சத்தம் சங்கமிக்காத குளியலறையில், கணவரின் ஆடைகளையும் தன் துணிமணிகளையும் துவைத்து முடித்துவிட்டு கல்லில் தேய்த்த மஞ்சளை முகமெல்லாம் அப்பி, ஷவர்பாத்தைத் திறந்து, மேலூற்றாய் வந்த நீர்ச் கருளில், தலையாடிக் கொண்டிருந்தபோது -

பஞ்சாபகேசன், கட்டிலில் உட்கார்ந்தபடியே, ஒரு தொள தொளப் பேண்டைச் சிரமப்பட்டு, உடம்புக்கு மேல் பூட்டிவிட்டு, கொடியில் தொங்கிய ஒரு சிலாக் சட்டையை எடுப்பதற்காக, கட்டில் விளிம்பில் கையூன்றி, பல்லைக் கடித்து, மூச்சையடக்கி, பெரும் பாடுபட்டு, தம் உடம்பைத் தானே தூக்கி நிறுத்தி, சுவரில் கை வைத்தபடி தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தார்.

கதவு தட்டப்பட்ட சத்தத்தைப் பார்த்துச் சிறிது நிதானப்பட்டார். பிறகு, அது, மனைவி துணி துவைக்கிற சத்தம் என்று அவராகவே அனுமானித்து, பல்லி மாதிரி, சுவரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/71&oldid=1371976" இலிருந்து மீள்விக்கப்பட்டது