பக்கம்:ஈச்சம்பாய்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

73


 "கதவைத் திறக்காட்டி போயிட்டு அப்புறமாய் வந்து இருக்கலாமே. உன்னால மாமாக்கு எவ்வளவு கஷ்டம் பார். என்னோட உடம்பையும் பார்."

புடைவையை ஒழுங்காய் உடுத்தாமல், நீர்சொட்டும் தலையோடு நின்ற மாமியை, மீனாட்சி நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்டு, "சாரி" சொல்லப் போனாள். அதற்குள் வேறுவகையான சத்தங்கள் கேட்டன. அவை ஒலித்த திசையையும் அவற்றை ஒலிக்க வைத்த மனிதரையும் மீனாட்சி அதிர்ச்சியோடு பார்த்தாள். மாமி மௌனமாகப் பார்த்தாள்.

பஞ்சாபகேசன், களிம்புப் பாட்டிலை எடுத்து, டைனிங் டேபிளில் எறிந்தார். முன்னால் கிடந்த நாற்காலியைக் காலால் கண்டி விட்டார். கையில் கிடந்த கடிகாரத்தைக் கழற்றி வீசி அடித்தார். பிறகு கால்களைத் தரையில் உதைத்தபடியே, தனது தலையில் தம் கரங்களால் மாறி மாறி அடித்துக் கொண்டார் மாமியைப் பார்த்துப் பல்லைக் கடித்தபடியே பலம் கொண்ட மட்டும் தலையிலடித்துவிட்டு, பிறகு அடித்து முடித்த களைப்பில் ஆவேசம் அடங்காமல் முகத்தைக் கோணல்களாக்கிக் கொண்டிருந்தார்.

மீனாட்சி, இங்கிதம் தெரியாமல் அங்கேயே கேட்டாள்:

"என்ன மாமி இது” மாமா இப்படிப் பண்றார்?"

"ஒண்ணுமில்ல, ஒன்னைக் காக்க வச்சுட்டேனாம். மாமாக்கு பொறுக்கல்ல."

"அதுக்காக இப்படியா? எங்காத்துல இப்டி நடந்தால், நான் ஒரு நிமஷம்கூட இங்கு இருக்கமாட்டேன். பெட்டி படுக்கையோட பொறந்தாத்துக்குப் போய்டுவேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/75&oldid=1371981" இலிருந்து மீள்விக்கப்பட்டது