பக்கம்:ஈச்சம்பாய்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஈச்சம்பாய்



லட்சுமி மாமிக்குக் கோபமும் வந்தது. கூடவே ரோஷமும் வந்தது.

"நோக்கு இப்போ இருபத்தெட்டு வயசு இருக்குமா? கல்யாணம் ஆகி ஆறு வருஷந்தானே இருக்கும்? கடைசி வரைக்கும் ஒன் ஆத்துக்காரர் எப்டி இருக்கார்னு பாருடி. இவரும் நானும் வாழ்ந்த வாழ்க்கையும், இவர் என்னை வச்கண்டிருந்த நேர்த்தியும் லோகத்துல யாருக்கும் வராதுடி. ஏதோ இப்போ, அதுவும் ஒனக்காக ஏதோ பண்ணிட்டார்னு ரொம்பத்தான் ஜட்ஜ்மென்ட் கொடுக்கறே."

"அய்யோ மாமி... என்னைத் தப்பாய் நினைச்சுட்டேன். நான் ஒங்களுக்குத்தான் வக்காலத்து வாங்கறதா நெனச்சுப் பேசிட்டேன். தப்புத்தான், மன்னிச்கடுங்கோ."

மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன்னையே மலங்கப் பார்த்த மீனாட்சியைப் பார்க்கப் பார்க்க மாமிக்குக் கண்கள் பனித்தன. "குழந்தையைச் சாபம் போடற மாதிரி வைதுட்டேன். பகவானே! என் வாயில ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளை வைக்கறே?"

மாமி பிராயச்சித்தம் செய்பவள்போல் பேசினாள்.

"ஏண்டி, நழுவப் பார்க்கிறே? ஒங்கிட்டே நேக்கு உரிமை இல்லையா? கிட்டே வா... குங்குமம் வைக்கிறேன். என்னோட பேரையும் ரிஜிஸ்டர் செய்துடு, வாடி."

மீனாட்சி, தயங்கித் தயங்கி மாமியை நெருங்கினாள். மாமியின் பெருவிரல் அவள் நெற்றிப் பொட்டை வருடியபோது அவள் மெய் சிலிர்த்தாள், "எப்பவும் குங்குமத்தை ஆள்காட்டி விரலால் எடுக்கக்கூடாது. பெருவிரலால்தான் எடுக்கணும். இதெல்லாம் இந்தக் காலத்துப் பொம்மனாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/76&oldid=1371999" இலிருந்து மீள்விக்கப்பட்டது