பக்கம்:ஈச்சம்பாய்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

77


பார்த்தவர்களில் பாதிப்பேர் அவளுக்காகவும், மீதிப்பேர் அவருக்காகவும் பரிதாபப்பட்டுக் கொண்டார்கள். ஒரு நாளா இரு நாளா? இந்த அஞ்சு வருஷமா, மாமி காலைல இந்த மாமாவ பஸ் நிலையத்துக்கு இப்படித் தூக்கிண்டு போறதும், அவரோடு ஆபீசுக்குப் போயி, அங்கேயும் ஆபீஸ்வரை தூக்கிண்டு போறதும், அப்புறம் சாயங்காலமாய் பெசன்ட் நகர் பஸ் ஸ்டாண்டுல மூன்று மணியிலேருந்து மாமாவுக்குத் தவம் கிடக்கறதும், எல்லாருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு மழை வந்துவிட்டால், மாமி துடிக்கிற துடிப்பு சொல்லி மாளாது.

ஆட்டோவையோ டாக்சியையோ பிடிச்சிண்டு ஆபீசுக்கு ஓடுவாள். மாமா, மத்தியானம் இரண்டு மணியிலிருந்து எப்ப வேணாலும் ஆபீசிலேருந்து வீட்டுக்குப் பொறப்படலாம். ஆகையால் மாமி மூன்று மணிக்கே பஸ் நிலையத்தில் இருக்கணும். ஒரு அஞ்சு நிமிஷம் தவறிட்டாலும் பஞ்சாபகேசன் கைக்கடிகாரத்தை வீசி எறிவார். தலையையும் வீசி எறிவதுபோல அடிச்கக்குவார். ஒரு வருஷமா. ரெண்டு வருஷமா. டெல்லியில் இருந்து வந்த நாள் மொதலா இதே கதைதான்.....

மாமி, தங்களை அனுதாபத்தோடு பார்த்தவர்களை, அன்பொழுகப் பார்த்தபடியே, கணவனோடு நடந்தாள். "இவங்களுக்குப் பிள்ளையா குட்டியா? எதுக்காக இந்த மாமி இப்படி அவஸ்தப் படணும்? ஒரு வேலைக்காரனைப் போட்டால் மாமாவை கூட்டிண்டு - போறான். எல்லாம் பணம் போயிடுமோன்னு பயம். மாமி கஞ்சம். மாமா மகா கஞ்சம்" என்று அவ்வப்போது வம்பு பேசும் வாய்கள் இப்போது புன்னகையாய் விரிவதை மாமி பார்த்தாள்.

"வேலைக்காரன்னு சொல்றேள். எங்காத்துக்காரர் அடிக்கடி தடுமாறி விழுறவர். வேலைக்காரன், ஆத்திரத்துலே அவர ரோட்ல தள்ளிட்டுத் தானா விழுந்துட்டார்னு சொல்லிட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/79&oldid=1371616" இலிருந்து மீள்விக்கப்பட்டது