பக்கம்:ஈச்சம்பாய்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

79



பேச்சாளர்களுக்கு மத்தியில், கணவரோடு மாலையும் கழுத்துமாய் உட்கார்ந்திருந்த லட்சுமி மாமி, வாழ்க்கையின் முன்படிக்கட்டில் நின்றபடி மேல்நோக்கி நடந்தாள். அந்தக் காலத்திலேயே கணக்கில் எம்.ஏ. பட்டம் வாங்கிவிட்டுப் புது தில்லியில் அதிகாரியாகப் பணியாற்றி இவரை முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைப்பிடித்த ரம்ய காட்சி கண் முன்னால் வந்தது.

'மாட்டுப் பொண்ணு அசல் மாடுதான். பஞ்க துரதிருஷ்டக்காரன்" என்று அக்கம் பக்கத்தில் பஞ்சாபியாய்ப் போன பிராமணப் பெண்களும் மற்றவர்களும் நையாண்டி செய்யும்போது, இவள், அவரிடம் அழுவாள். அப்போதெல்லாம், "அடி பைத்தியம். பன்றிகளைக் கண்டால் யானைதான் தானாய் விலகிப் போகணும். ஒருவேளை என்னைக் கல்யாணம் பண்ணிண்டதாலே நீ துரதிருஷ்டகாரியோ என்னவோ? நேக்கு எம்.ஏ.வுல பஸ்ட் கிளாஸ் கிடச்சதைவிட, எடுத்த எடுப்பிலேயே ஜேர்னலிஸ்ட் டைப் உத்தியோகம் கிடைச்சதைவிட நேக்கு நீ கிடைச்சதுதான் சூப்பர் கிளாஸாக்கும்" என்பார்.

மாமி கண்களை துடைத்துக் கொண்டாள்.

"அப்போதெல்லாம் எப்படி இருப்பார் தில்லியில் வின்டர் வரும்போதெல்லாம் டை கட்டி, கோட் போட்டுண்டு வந்தார்னா பார்க்கறதுக்கு எப்படி இருக்கும் இவரோட பார்க்காதா பிக்சர் இல்ல, கேளாத கச்சேரி இல்ல. போகாத இடம் இல்ல. வாங்காத பொருள் இல்ல. பொறந்தாத்துலேருந்து அப்பா, அம்மா இறந்த துக்கம் தாங்காமல் வந்தபோது, அவரை இருபது வருஷமா ஒரு முணுமுணுப்பு இல்லாமப் பேணினவர். என்னோட அக்கா வாழாவெட்டியா வந்தப்போ, அவளுக்குச் சாகறவரைக்கும் இருக்க இடம் கொடுத்தவர். பத்து வருஷத்துக்கு முன்னால வரைக்கும், ஒரு வார்த்தை கட்ட அதட்டிப் பேசாதவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/81&oldid=1371743" இலிருந்து மீள்விக்கப்பட்டது