பக்கம்:ஈச்சம்பாய்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

83


கவனிச்சா எப்படி? உன்னைக் கவனிக்க வேண்டாமா? போ, சீக்கிரம் போ” என்று கத்தினார்.

மாமி, கண்களைத் துடைத்துக் கொண்டாள். மாமா கட்டிலில் படுத்தார். மாமி அருகே வந்து “சமர்த்தாய்த் தூங்கணும், நேக்கு டாக்டரப் போய்ப் பார்த்துட்டு வர நேரமானாலும் ஆகலாம்” என்றாள். மாமா குழந்தையைப் போல் தலையை ஆட்டினார். பிறகு கையை நீட்டினார். மாமியை வரும்படி சைகை செய்தார். மாமி தம் அருகே வந்ததும், அவள் கழுத்தைத் தடவி விட்டார்.

லட்சுமி மாமி, வீட்டைப் பூட்டி விட்டு வெளியேறினாள்.

காலையில் போனவள் மாலையில்தான் திரும்ப முடிந்தது. ஆயிரம் பரிசோதனைகள். ஏழெட்டு டாக்டர்கள். இப்போது வந்ததே பெரிய விஷயம்.

கணவர் எப்படி இருக்கிறாரோ என்று படபடப்பில், கதவைத் திறந்தாள். மீண்டும் கதைவை மூடினால் நேரமாகும் என்று பயந்தவள் போல் நடந்தாள். மாமாவைப் பார்க்க காலதாமதம் ஆகும் என்று கருதியவள்போல் அவசரம் அவசரமாகப் படுக்கை அறைக்குள் ஓடினாள். பஞ்சாபகேசன் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். மேஜையில் இருந்த பிளாஸ்க் காலியாய் இருந்தது. வாழைப்பழத் தோல்கள்தான் இருந்தன.

மத்தியானம் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவர் தூங்குவதை அனுமானித்துக் கொண்டாள். திடீரென்று வரவேற்பறையில், “மாமி” என்ற சத்தம். லட்சுமி மாமி வெளியே வந்தாள். மீனாட்சி தன் கணவனுக்காகத் தான் செய்யப்போகும் காரியப் பெருமிதத்தில் பேசினாள். “மாமி, ஞாபகம் இருக்கோ. நாளைக்குக் கந்தசாமி கோயில்ல குத்துவிளக்குப் பூஜை பண்றோம். சுமங்கலிப் பிராத்தனையும் செய்யறோம். ரெடியா இருங்கோ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/85&oldid=1371856" இலிருந்து மீள்விக்கப்பட்டது