பக்கம்:ஈச்சம்பாய்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஈச்சம்பாய்


நாலஞ்சு போலிஸ்காரங்க திபு திபுனு வந்தாங்க. அதுல ஒருத்தன் வாய்குள்ள போன சோத்துக் கையை முறுக்குனான்... இன்னொருத்தன் என் பிள்ளய மல்லாக்கத் தள்ளுனான். ஏதோ பேசப்போனவன் வாயிலே ரத்தம் வரும்படியா குத்தினான், ‘போலிஸ் ஸ்டேசனுக்கு, டயர் திருட்ட விசாரிக்க வான்னா வரமாட்டியா... போலீச ஒன் மாமான்னு நெனச்சியா’ன்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருத்தனும் அடிச்சு என் பிள்ளய பிடிச்சிட்டுப் போய்டான்யா. நீ செல்லமா வச்சிருந்த என் பிள்ளாண்டான என் கண்ணு முன்னாலேயே கைய வளச்கக் கட்டி, அடி அடின்னு அடிச்சு, நாய இழுத்துட்டுப் போய்டாம்பா’

சுந்தரம் ரத்த அழுத்தம் கூடாமலிருக்க மத்தியானம் உட்கொள்ள வேண்டிய மாத்திரையை கைப்பையிலிருந்து எடுத்து மனைவியைப் பார்த்தார். அந்தம்மாவும் உள்ளே ஓடிப்போய் ஒரு டம்ளரோடு வெளியே வந்து கணவனிடம் நீட்டிவிட்டு தன் பங்குக்கும் பேசினாள்.

‘நீங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் போலிஸ்காரங்க கேட்கல பாருங்க... அவனுகள விடப்பிடாது.. ரெண்டுல ஒண்ணு பார்த்தாகணும்... பொன்னம்மா! நீ வீட்டுக்குள்ள வந்து சொல்லி இருக்கலாம்... கூட்டம் கூடிட்டுப் பாரு..’

‘நீ நினைக்கிற மாதிரி ஒன் நாய் நினைக்க மாட்டேங்குதே.... ஒரு மணி நேரமா அல்லாடுறேன்.. ஆனாலும், அந்த நாய் முறைச்ச முறைப்புல என் கொலயே நடுங்கிட்டு... சீக்கிரமா போப்பா... என் பையன பண்ணாத கோலமில்லாம் பண்ணுறாங்களாம்... பழய பகை வேற உண்டுப்பா.. எங்க சேரிப்பக்கம் சாராய மாமூலுக்கு வார போலிககளை இந்தத் தத்தேரிப்பய ஒரு நாள் திட்டிட்டான்... சார் போட்டுத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/90&oldid=1371878" இலிருந்து மீள்விக்கப்பட்டது