பக்கம்:ஈச்சம்பாய்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

89


திட்டினான்... ஆனாலும் போலிசுக்காரன், யானை சுண்ணாம்புத் தேங்காய மறக்காதது மாதிரி மறக்கல...

கந்தரம், போலிசை மடக்க யூகம் வகுப்பதுபோல் தலையைச் சொரிந்தார்... மூக்கை ஆள்காட்டி விரலால் அடித்தார்... அவர் மனைவிதான் உஷார் படுத்தினாள்.

‘சீக்கிரமா போங்க... அவங்க மசியாட்டா உங்க பிரெண்டு டெபுடி கமிஷனர்கிட்ட போங்க.... அழாத பொன்னம்மா... இன்னும் அரைமணி நேரத்துல உன் மகன் உன் பக்கத்துல வந்து நிப்பான்... போதுமா.. அவருக்கு வழிய விட்டுட்டு உள்ள வா- பாத்திரங்களும் இருக்கு பழய சாதமுமிருக்கு’

காரில் பறந்த சுந்தரத்திற்கு கடந்த ஓராண்டு காலத்தில் இந்த மாதிரியான கோபம் வந்ததில்லை. அதன் வெளிப்பாடாக கார் அங்கும் இங்குமாய் லைன் மாறி ஓடியது. சில கார்க்காரர்களிடம் திட்டுக்களை வாங்கிக் கொடுத்தது. ஒரு ஓரமாய் ஹாயாய் நடந்த ஒரு சல்வார் கம்மீஸை அலறி அடித்து ஓட வைத்தது. ஆனாலும் அவர் காரின் போக்கு பற்றியோ, காதில் விழுந்த திட்டுகளைப் பற்றியோ மனதில் பதிக்காமல் அதே மனதின் முன்னைய நிகழ்ச்சிகளை பாதிப்புக்களாக்கிப் பார்த்தார்.

‘என்ன அநியாயம்... எங்கேயும் நடக்காத அநியாயம்... போன மாதம் வாங்கின கண்டசலா கார் டயர்கள எந்தப் பயலோ அல்லது கும்பலோ கழட்டிட்டுப் போனது நிசம்தான்... இரவோடு இரவா நடந்த திருட்ட மறுநாள் ஆமை மாதிரி கிடந்த காரைப் பார்த்ததும், உடனே போலீகல புகார் செய்தது இந்த பாக்கியமுத்துதான்... போலீசுக்காரங்க லத்தியும் கையுமாய் வந்ததும்... பாராட்டுக்குரியதுதான்... ஆனா அவங்க பாராட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/91&oldid=1371883" இலிருந்து மீள்விக்கப்பட்டது