பக்கம்:ஈச்சம்பாய்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

95



புறப்பட்டார். அவர் தொப்பி மறைவதுவரைக்கும் கண்களால் சல்யூட் அடித்தபடியே பார்த்த ஏட்டோ, சப் இன்ஸ்பெக்டரோ, சுந்தரத்தை சிநேகிதமாகப் பார்த்தார். பிறகு மேஜையின் அண்டிராயர் மாதிரியான ஒரு அடைப்பை இழுத்து, குப்பையாய் கிடந்த காகிதக் குவியலை நிமிர்த்தி, கைகளால் இஸ்திரி போட்டுவிட்டு, கந்தரத்திடம் நீட்டினார்.

சுந்தரம், அந்தக் காகிதங்களை மேலோட்டமாகவும், மேலும் கீழுமாகவும் பார்த்தார். சந்தேகமில்லை. இது பாக்கியமுத்து வோட எழுத்துத்தான்.

கந்தரம், பாக்கியமுத்துவின் இறந்துபோன அப்பன், இறக்கத்துடிக்கும் அம்மா, உறங்கமுடியாத வீட்டு முகவரி, வயது, ஜாதி, தொழில் ஆகியவை பற்றிக் கொடுத்த விவரங்களை உதாசீனமாய் ஒதுக்கிவிட்டு, அதற்குப் பிறகு வந்த தகவல்களை மாறி மாறிப் படித்தார். 'அடப்பாவி... இரண்டாவது குறுக்குத் தெருவுல மொபட்ட திருடினானாம்... அஞ்சாவது அவின்யூவில புத்தம் புது ஏசி. மெஷின கழட்டி வித்தானாம்... பிள்ளையார் கோவில் பக்கம் ஒருத்தியோட தாலியை அறுத்திட்டு, அடயாளம் தெரியாத ஒரு பாவி தப்பிச்சு ஓடினானே. அவனுக்கு இடம், பொருள், ஏவல் சொல்லிக் கொடுத்ததே இவன்தானாம்... போன வாரம் ஒரு பச்சப் பொறுக்கிய அடிச்சுப் போட்டானே... அது கூட ஒரு நடிப்பாம்... திருடின சாமான்களை எங்கே விற்றான்னு அட்ரசையே கொடுத்திருக்கிறான்... இந்த லட்சணத்திலே ஒவ்வொரு பக்கமும் இவன் கையெழுத்து... நம்பவும் முடியல, நம்பாமவும் இருக்க முடியல...

சுந்தரம், விழி பிதுங்க பிரமித்தார். இரண்டு கைகளையும் முயல்வேடம் போட்டதுபோல் காதுகளோடு வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/97&oldid=1371830" இலிருந்து மீள்விக்கப்பட்டது