பக்கம்:ஈட்டி முனை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

2. பாச்சா பலிக்காது!

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ஒரு பொருள் தனி எனும் மனிதரைச் சிரிப்போம்!

           (பாரதிதாசன்)

இலக்கியம் என்பது தனிப்பட்ட சிலரின் பாத் தியதை என்ற நம்பிக்கை செல்லுபடியாகாது. என்றும் எங்கும் எடுபடுகிற சித்தாந்தமும் அல்ல. தமிழ் மொழி தனியான சங்கங்களின், மன்னர் களின் வித்துவான்களின் செல்லப்பிள்ளை என்ற எண்ணம் நிலவி வந்த காலம் ஒன்று உண்டு. மலையேறிப் போன அதைப் போலவே, அதைவிட மோசமாய் தூள் தூள்தூளாகி மண்ணோடு மண்ணாக்கப் படும் இந்த இலக்கியம் கருவிலே திரு உடையார்’ சிலரது கலைச் சொத்து என்கிற கவைக்குதவாத பேச்சும் ! எதையும் குள்ளக் கருத்துடன் சுயநலத்துக்கு கள்ளமனத்தினர் பயன்படுத்த எண்ணும் போது, சாதாரண மக்களின் கையிலேயிருந்து பதுங்கிவிட நினைக்கும் போது, அதற்கு தெய்வீகப் பூச்சு பூசி விடுகிறார்கள். கடவுளே கற்பித்தது என்று அளக் கிறார்கள். இன்னும் மாயாஜால வித்தைகளை எல் லாம் அடுக்கி மழுப்புகிறார்கள். செத்த மொழியாகிவிட்ட சம்ஸ்கிருத்தை வேத பாஷை யென்று சொல்லி தனிப்பட்ட கும்பலின் சொத்தாக்கி சாக அடித்த மூளைகள் தான் தமிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/11&oldid=1368006" இருந்து மீள்விக்கப்பட்டது