பக்கம்:ஈட்டி முனை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

 வர்கள். என்? இலக்கியம் என்றால் என்ன என்றே உணராத சாதி கனவுக்குப்பாடிகள், புகழுக்குப் பாடிகள், காசுக்குப் பாடிகள் அவர்கள்! உலகிலே உயிர்க்குலம் பெற்றுவரும் அறிவு மலர்ச்சியை உணர விரும்பாது, உணர்ந்தாலும் தமிழிலே அவ்வித மலர்ச்சி புகுத்த உழையாது. பழமைக்கு மெருகு பூசி மடமைக்கு வர்ணம் தீட்டி மறுமலர்ச்சி என்று மயங்கும் விழிகண் குரு டர் கூட்டம் இன்றைய இலக்கிய உலகிலே பெருகி விட்டது. அவர்கள் முதலில் திருந்தவேண்டும், ஊருக்கு உபதேசிக்கக் கிளம்புவதன் முன்பாக, இலக் கியத்திலேயே பாலபாடம் படிக்க வேண்டிய நிலே யிலே தான் இருக்கிறார்கள் பெரும்பாலோர். அவர் களை எண்ணும்போது ஏசுநாதர் சொன்னது போல அவர்களுக்கு ஐயோ! என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் அறியவில்லை என்று அனுதாபம் கூறவேண்டியது அவசியமாகிறது. ____________________________________ சிறந்த சிந்தனை நூல் தயாராகிறது மதம் அவசியமா? ஆசிரியர் : அசோகன் 'மதம் மக்களுக்கு அபின் என்றான் பேரறிஞன். மதம் மக்கள் நிலையை உயர்த்துகிறதா. தாழ்த்துகிறதா? இன்றைய மக்களின் போக்கு எப்படி இருக்கிறது: மதம் தேவைதானா? இவைபோன்ற பிரச்னைகளை ஆராயும் நூல் .


இது ஒரு சாந்தி நிலைய வெளியீடு ____________________________________

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/17&oldid=1368016" இலிருந்து மீள்விக்கப்பட்டது