பக்கம்:ஈட்டி முனை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17

ரொம்ப சந்தோஷம் போற்றவேண்டியதே. வரவேற்கத் தக்க வளர்ச்சியும் கூட. ஆனால், இவற்றிலே பெரும்பாலானவை காகிதத்துக்கும் அச்சு மைக்கும் உழைப்போர் சேரத்திற்கும் பிடித்த கேடு தான்! களவாணித்தனமும். மாரீசமும், கூறி யது கூறல், புலம்பியது புலம்பல் போன்றனவும், சிறுபிள்ளைகள் தகரடப்பாவிலே கற்களைப் போட்டு ஓசை எழுப்பி மகிழ்கிற வித்தைகளும் தான் மலிந் துள்ளன. காதல் எனும் பெயரால் காமத்துக்கும் கவிதையெனும் பெயரால் பேத்தலுக்கும் குறைவில்லை.

புத்தகங்கள் வந்து குவிகின்றன, ' சாரமற்ற . கதைகளும் உயிரற்ற கட்டுரைத் தொகுப்புகளும் - போகப் பிற அயல்நாட்டு நூல்களைத் தழுவி எழு திய அரசியல் நூல்களும் நாட்டுச் சரிதைகளும் மொழிபெயர்ப்பு நாவல்களும் தான். இப்போது சொந்தத் திறமையைக் காட்ட சிலர் நாவல் எழுத முற்பட்டிருக்கிறார்கள். முழு வெற்றி பெற்றவர்கள் அதிகமில்லை. இத்தகைய தேக்க நிலை ஏற்பட்டிருப்பதேன் இலக்கியத்திலே? இதே கேள்வியை பலர் என்னிடம் கேட்கிறார்கள். | இலக்கிய நண்பர் ஒருவர் எனக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றை இதோ தருகிறேன் -

  • இலக்கியத்தில் தேக்கம் ஏன் என்று யோசித் துப் பார்த்தேன். எனக்குத் தோன்றியது. '

1. தப்பி ஓடுங் கொள்கை (Escapism) -- வாழ்வின் பிரச்னைகளை, சமூகத்தின் கோரங்களை, அதன் அடிப்படைக் காரணங்களை, அவற்றுக்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/19&oldid=1119072" இருந்து மீள்விக்கப்பட்டது