பக்கம்:ஈட்டி முனை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

 கொள்கைகள், மத சம்பிரதாயங்கள் போன்றவற்றி லே அர்த்தமற்ற, தெளிவற்ற நம்பிக்கை கொண்டு கிடக்கிறார்கள் பெரும்பாலோர். வாழ்க்கை என்பது என்ன. வாழ்வின் தன்மை என்ன, இன்ப வாழ்வை எப்படிப் பெறலாம் என் பன போன்ற முக்கிய விஷயங்களே அறியமுடியாது "இந்திரனார் உலகிலே இன்பம் இருக்குதென்பார்’ என்று கருதி அல்லலுற்று கவலை வளர்த்து வாழ்வை மண்ணாக்குவோர் எண்ணற்றவர்கள். உரிமையற்று உடலோய உழைத்துச் செத்துக் கொண்டிருப்பவர்கள் கணக்கற்றோர், சுரண்ட லால் வஞ்சகத்தால். சூழ்ச்சியால் வாழ்வோர் கணக் கிலர். சிந்தனையற்று, சிந்திக்கத் தெரியாது பொட்டுப் பூச்சிகளாய் வாழ்ந்து மடியும் கூட்டம் பெரிது. கவலையற்ற, நோயற்ற, சுகவாழ்வை இங்கேயே அனுபவிக்கலாம் என்பதை உணரமுடியாது மிரு கங்கள் போல் வாழ்வோர் எவ்வளவோ! சமூகத்திலே அறியாமை பேய்நடம் புரிகிறது. அறியாமை முதலாம்;இழிதகமைகள் அனைத்தையும் வேரறுக்க வேண்டும். அதற்கு உரிய கருவி இலக் கியம் தான். மக்களைச் சிந்திக்க வைப்பது, சிரிக்கச் செய்வது, சீர்திருந்தத் தூண்டுவது; அவர்கள் கவலையை, அறியாமையை நீக்குவது வாழ்க்கையிலே பற்றுதல் ஏற்படுத்தவல்லது. இன்ப வாழ்வு காணத்தூண்டு வது. மனிதராக வாழவைப்பது - எவ்வளவோ வலிமை பெற்றது இலக்கியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/26&oldid=1369049" இலிருந்து மீள்விக்கப்பட்டது