பக்கம்:ஈட்டி முனை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

 இலக்கியவாதிகளின் பேனா தமிழை வளர்ப்பது, யார்? தமிழ் தானாக வளரும். மக்களால் வழங்கு தமிழைத் தனியொரு கும்பல் சொந்தமாக்கி வளர்க்க வேண்டிய அவசியமில்லை. மலையிலே பிறந்து தென் னன் மடியிலே தவழ்ந்து, நீரிலே நீந்தி நெருப்பிலே குளித்து ஜாலங்கள் செய்த எட்டுக்கலையை வளர்ப் போம் எ ன் று கூறி நாட்டைக் கெடுப்பவர்கள் மொழி வளர்க்க வகை செய்வோரல்லர், என்று மீண்டும் கூறுகிறேன். மொழியும் இலக்கியமும் கலையும் மக்களின் உரிமை. மக்களுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக என்று மீண்டும் குறிப்பிடுகிறேன். இவ்விதம் கூறவரும் என்னை பழமை விரும்பி கள் காய்கிறார்கள் என்பதை நான் அறிவேன், வசைபாட வந்தவன் என்று பேசி மகிழ்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு எதுவும் எழு தத்தெரியாத காரணத்தால் சிசுபாலதாசனாக மாறி, விட்டேன் எனப் பித்தர்கள் புலம்புவார்கள்! எனது எழுத்திலே கலையில்லை. இலக்கணமில்லை என்று காசுக்கும் கனவுக்கும் எழுதி கலைவளர்ப்பதாகப் பேசுவோர். கேலி பேசலாம். ஆம். கலை இல்லை: தான், அவர்கள் கனவு நோக்குப்படி. ஆமாம். கவிதை இல்லே தான் அவர்களது அடிமை உணர்ச்சி நோக்கிலே. அழகு இல்லை தான், காதலும் அந்தப்புர லீலா விநோதங்களும் எனது எழுத்திலே இல் லவே இல்லே தான், குறுகிய மனோபாவம் பெற்று. விட்ட இலக்கிய சனாதனிகளின் விழிகண் குருட்டுப் பார்வைப்படி: ஆனால் எனக்கு கவலையில்லை. என் எழுத்திலே கருத்து இருக்கிறது, சிந்தனை இருக்கிறது. உண்மை இருக்கிறது. உயிர் இருக்கிறது. புதுமை இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/33&oldid=1370294" இலிருந்து மீள்விக்கப்பட்டது