பக்கம்:ஈட்டி முனை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

 6. எழுதுங்கள் ! கலையே வளர்! தொழில் மேவிடு! கவிதைபுனை தமிழா! நீதி நூல் விளை !உயிர் நூல் உரை ! நிசநூல் மிக வரைவாய்! (பாரதிதாசன்)

இலக்கியத்திலே ஜனநாயகமா என அங்கலாய்க் கிறார்கள், தாம் தான் எழுதப் பிறந்தவர்கள் என எண்ணுகிற ஒரு சிலர், எல்லோரும் எதைப்பற்றி யும் எழுதலாம்; எழுத முடியும்; எழுதும் பக்குவ மும் பண்பும் பெறலாம், எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு உழைத்தால். என நான் சொல் கிறேன். எழுத முடியாது எல்லோரும், இல்க்கிய ஜன. நாயகம் வெற்றி பெறாது, இலக்கிய சர்வ வியாபகம். என்பது சரியல்ல என்று கூச்சல் போடுகிறவர்களை வீணர்கள் என எண்ணுங்கள். எழுத வேண்டும் என்ற ஆர்வம் வெறியாகப் பற்ற, எழுத முடியும் என்ற நம்பிக்கை அழுத்த மாகப் பதிய, எழுதி எழுதிப் பண்பு பெற்றுவிடுகிற யாரும் எழுத்தாளனாகி விட முடியும். படித்து, சிந்தித்து, அனுபவத்தால் உணர்ந்து, தான் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தெளிவாக எழுதுகிற' தன்மையை யாரும் பெறமுடியும். ஒருசிலர் தான் சிறுகதைகளும் காவிய மும் பிறவும் சிருஷ்டிக்க முடியும் என்று சொல்கிறவர் கள் சொல்லிக்கொண்டே கிடக்கட்டும், தமிழன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/36&oldid=1370321" இலிருந்து மீள்விக்கப்பட்டது