பக்கம்:ஈட்டி முனை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

துடன் ஒரு சிலருக்கு தாஸர்களாக பூர்ஷ்வா' இலக்கியத்திலே இன்பம் மாந்திக் கிடந்தால் 'சுப்ர தீபங்கள், கரண்டு கரண்டு அவியட்டும்' என்று கவனியாது ஒதுக்கிவிடலாம்.

எழுதுகிற ஒரு சிலரை ' எள்ளி நகைத்துக் கெக்கலி கொட்டினாலும் கூட "அறிவற்ற அந்த காரத்திலே கிளை கூட்டும் ஆந்தைகள்' என்று! தள்ளிவிடலாம்.

ஒருசிலரை 'கோஷ்டி' சேர்த்து பழமைக்கும் . முன்னைப் பழமைகளை 'புதுமெருகு' என்று ஏட்டில் தீட்டி, நாட்டைக் குட்டிக் சுவரா யடிப்பதுடன், விழிகண் குருடராய், பிள்ளைப் பூச்சிகளாய், 'உலகமே இருண்டு விடும்' என்ற மனோபாவத்துடன் வாழும் பூனைகளாய் திரிவதுடன் இலக்கியத்தை, தமிழை, தமிழகத்தை சாக்கடைத் தேக்கமாய், காம மேதிகள் புரளும் சேற்றுக் குட்டையாய் மாற்றி - வந்திருக்கிறது -வருகிறது சுயநலக் கும்பல், பிறரையும் ஆட்டிவைத்து இலக்கிய சாம்ராட்டுகளாய் காலம் தள்ளக் கனாக் காண்கிறது. பிறரைக் குறைகூறுவதுடன், இலக்கியம் சிருஷ்டிக்க வல்ல பிராக்கள் தாங்களும் தங்கள் பட்டயம் பெற்ற ஒரு சிலருமே - தங்கள் 'சங்கப் பலகை' அங்கீகரித்த ஒரு சிலரே - என எண்ணி ஒலி பரப்பவும் துணிகின்றது! என்ன பேதமை!

இவ்விதம் தனித்தனிக் கும்பல்களாக தலை தூக்கி நிற்கின்றன தமிழ் நாட்டிலே. இவை தவிர உருப்படியாய் தமிழ் இலக்கியத்துக்கு விமோசனம் பிறந்திருப்பதாக சரித்திரம் காட்டவில்லை. புராணங்கள் புழுகு என்றோம், அப் புழுகுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/6&oldid=1295834" இலிருந்து மீள்விக்கப்பட்டது