பக்கம்:ஈட்டி முனை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7

கிய பிரம்மாக்களாக இருக்கலாம். ஆனால் அறிவொளி பரப்பும் சிந்தனையாளர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

'அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
முதலெழுத் தோதினும் மதியிருட்டாதும்!'

முதலெழுத்து மட்டுமல்ல - முக்க முழுக்க இவர்களின் எழுத்துக்களையே பொழுது போக்குக்காகவும். இலக்கியம் எனவும் படிக்க வேண்டிய தொல்லை தமிழ் நாட்டுக்கு ஏற்பட்டு விட்ட காரணத்தால் - இவர்கள் ஏற்படுத்திவிட்டதனால் - சமுதாயம் அறிவு வளர்ச்சியற்று, சிந்தனை! விழிப்பற்று தூங்கிக்கிடக்கிறது.

இனியும் தூக்கத்திலேயே ஆழ்த்தவேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் செல்லுபடியாகாது, காலம் மாறி வருகிறது. புதுயுகத்தின் பொன்னொளி எங்கும் கால் வீசி மிளிர்கிறது. இருள் விரும்பும் இலக்கிய ஆந்தைகள் பொந்துகளில் பதுங்க வேண்டிய காலம் வந்துகொண்டிருக்கிறது.

அறிவின் சன்னதியில் நின்று சிந்தனைச் செல்வர்கள் சங்கநாதம் செய்கிறார்கள், எழுச்சி முரசு கொட்டி ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழும் தமிழரும் உயர்நிலை மீண்டும் பெறக் கொடி கட்டியாயிற்று.

புதுயுக உதயத்தால் கண்ககூசுகிற சில பொறாமைப் பூனைள்கள் கிண்டில்கள் எறிவதிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/9&oldid=1295853" இருந்து மீள்விக்கப்பட்டது