பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

99

நடத்தினார். எஸ்.பி.வெங்கடாசலம் எஸ்.சி. தியாகராசன் போன்றோர் கலந்து கொண்டனர்,

வனமலர்ச்சங்கம்

சென்னைக்கு உயர் கல்விக்குச் சென்ற ஈரோட்டு மாணவர்கள் முயற்சியால் சென்னையில் 1928இல் 'வனமலர்ச்சங்கம்' என்ற சங்கம் தோன்றி பாரதி பாடல்களையும், வ.வே.சு போன்றோர் பணிகளையும் பரப்ப 'பித்தன்" என்ற இதழை நடத்தினர். அதற்கு ஆசிரியர் ஈரோடு டாக்டர் எல்.கே. முத்துசாமி அவர்கள், கவிஞர் மஞ்சக்காட்டுவலசு ம.ப. பெரியசாமித் தூரன் பதிப்பாசிரியர், குட்டப்பாளையம் கே.எஸ். பெரியசாமிக்கவுண்டர், கே.எஸ். பழனிசாமிக்கவுண்டர் போன்றோர் முக்கிய உறுப்பினர்கள்.

கள்ளுக்கடை மறியல்

25.9.1921 ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்தில் காந்தியடிகள் தங்கியபோது தான் 'கள்ளுக்கடை மறியல் போராட்டமே உருவானது. அதற்கு மிகவும் முக்கியக் காரணமாக இருந்தவர்கள் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் தான். 22.12.1921இல் 'யங் இந்தியா' இதழில் 'இரு ஈரோட்டுப் பெண்கள்' என்ற தலைப்பில் அவர்களைப் பற்றிக் காத்தியடிகள் பாராட்டி எழுதியுள்ளார். கள்ளுக்கடை மறியலை நிறுத்தி அரசின் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்று முக்கிய தலைவர்கள் கூற அது என் கையில் இல்லை. ஈரோட்டுப் பெண்கள் இருவர் கையில் தான் உள்ளது என்று காந்தியடிகள் கூறினார். பெரியார், தங்கப் பெருமாள் பிள்ளை உள்பட 40 பேர் கள்ளுக்கடை மறியலில் சிறை புகுந்தனர்.

போராட்டங்கள்

விடுதலைப் போரின் அங்கமாக நடைபெற்ற அனைத்துப் போராட் டங்களிலும் ஈரோட்டு மக்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். நாகபுரிக் கொடிப் பேராட்டத்திற்கு ஈரோட்டிலிருந்து எம்.ஏ. ஈஸ்வரன் தலைமையில் வீரர்கள் சென்றனர். வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில்