பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஈரோடு மாவட்ட வரலாறு


அமுது செய்து அவர்கட்குப் பிரசாதம் வழங்க திங்களூர்க் கோயிலில் கொடையளிக்கப்பட்டுள்ளது.

வைஷ்ணவக் கோயில் காணியுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிலரின் பெயர் திருவேங்கிடப் பெருமாள் தாசன், அழகப் பெருமாள், மலைகுனிய நின்றான், அழகிய மணவாளன் என்பதாகும். ஒருவர் பெயர் "நம்பிமாரில் சொக்கன் சிறுத்தொண்டனான வேங்கடப் பெருமாள் தாதன்" என்பது, 'ஸ்ரீ ஜெயந்தி' திருநாள் கொண்டாடக் குன்னத்தூர் கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்டுள்ளது.

கோரவிகோதை ஈரோடு பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலில் வெற்றி அபிஷேகம் செய்து கொண்டதால் அக்கோயில் "அபிஷேக விண்ணகரம் பெருமாள் கோயில்" எனப்பட்டது. தாராபுரம் உத்தம வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு 'ராஜ்ய அபிஷேக விண்ணகரம் பெருமாள் கோயில்' என்று பெயர். மூன்றாம் வீர வல்லாளனின் தண்ட நாயகன் சிங்கயத் தண்ணாயக்கன் தன் தந்தை மாதப்பத்தண்ணாயக்கன் பெயரில் டணாயக்கன் கோட்டையில் ஒரு பெருமாள் கோயில் கட்டி அதற்கு மாதவப் பெருமாள் கோயில் என்று பெயரிட்டு கொங்கு நாட்டில் 13 ஊர்களைக் கொடையாக அளித்தான், அவன் திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ஈரோடு மாவட்ட ஆப்பக்கூடலைக் கொடையாக அளித்தான்.

ஈரோடு மாவட்டக் கொங்கு வேளாளத் தலைவர்கள் சிலர் திருவரங்கம் சென்று வழிபட்டு மகப்பேறு பெற்றமையால் "சீரங்கராயன், சீரங்காயி" என்று தம் ஆண், பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்ததாகப் பட்டயங்கள் கூறுகின்றன. வைணவக் கோயில்களை பெருமாள் கோவில்கள் என அழைக்கும் ஈரோடு மாவட்ட மக்கள் பலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வதை வழக்க மாகக் கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்ட ஆடவர் பெயர்களில் சைவப் பெயரை விட வைணவப் பெயர்களே அதிகம் ஆகும். சிவன்கோவில் முன் உள்ள தீபத்தம்பத்தை “கருட கம்பம்" என்று அழைப்பது வைணவத் தாக்கமே. அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பெரியபுலியூர்