பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

221


2% ஒதுக்கப்பட்டது. பின்னர் அது ரூபாய்க்கு அரையனா ஆயிற்று 1900ஆம் ஆண்டு அது 25% ஆனது. 1879இல் பொதுப்பணித்துறை சாலைகளை உள்ளூராட்சி நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. உள்ளுராட்சிகள் சாலைப் பராமரிப்புக்குச் 'சுங்கவரி' வசூலித்தன. 1930-31ல் வாகனவரி விதிக்கப்பட்டவுடன் சுங்கவரி நீக்கப்பட்டது. 1937இல் 'மார்க்கெட்டிங் ரோடு' என சில அழைக்கப்பட்டு அவற்றிற்கு 50% மானியம் பராமரிப்புக்கு அரசு அளித்தது.

1946இல் "யுத்தத்தின் பின் வளர்ச்சித் திட்டம்" மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பிரிவாக நீண்ட தூர சாலைப்பராமரிப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு "நெடுஞ்சாலைத்துறை" என அது அழைக்கப்பட்டது. அதுவே, இன்று தனித்துறையாகச் சாலைகளை நிர்வகித்து வருகிறது. துறை வளர்ச்சி பெற்றது. சாலை, பாலம் அமைத்தல் பராமரிப்புப் பணிகள். மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில்

தேசிய நெடுஞ்சாலை - 137.20 கி.மீ
(NHI7 கோவை-நாகை; NH47 கொச்சி-சென்னை) அண்மையில் கோவை - மைசூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக (NH209) அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலை - 3783.25 கி.மீ.
நகராட்சி சாலைகள் - 402.979 கி.மீ.
நகரப்பஞ்சாயத்து, நகரியச்சாலை - 1783.182 கி.மீ.
ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி சாலை - 4318.095 கி.மீ

படகுப் போக்குவரத்து

ஊராட்சிக்கோட்டை, பிராமணப் பெரிய அக்கிரகாரம், காசி பாளையம் ஆகிய கிராம எல்லையில் காவிரியிலும், தாராபுரத்தில் அமராவதியிலும் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது. பவானியாற்றிலும் படகுப் போக்குவரத்து நடைபெற்றதை 'ஓடத்துறை' என்ற ஊர்ப் பெயரால் அறிகின்றோம். பாலங்கள் பல ஏற்பட்டதால் படகுப் போக்குவரத்துக் குறைந்தது.