பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

71

உள்ளன. கிருஷ்ணதேவராயரின் கொங்குப்பகுதி அதிகாரி வாலய தேவராசா அச்சுததேவராயர் காலத்திலும் பணியில் இருந்துள்ளார். அவர் பெயர் கீரனூர், அலங்கியம் கல்வெட்டில் காணப்படுகிறது. அவர் 'தட்சிணபுஜம்' என்று சிறப்பிக்கப்படுகிறார். அச்சுதராயர் அதிகாரிகள் கோவிந்தராயர், திம்மாதராயர் ஆகியோர் அறச்சலூர், அலங்கியம் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். பிடாரியூரில் உள்ள மதுரை விசுவதாத நாயக்கர் கல்வெட்டில் அச்சுததேவமகாராயர் குறிக்கப் பெறுகிறார். குருக்கபாளையம் மேலை மடம் ஞானசிவாச்சாரியாருக்குக் கொடைகள் அளிக்கப்பட்டன (1532)

அச்சுததேவராயர் தம்பி ரங்கராயன் மகள் சதாசிவராயர் அடுத்து ஆட்சிக்கு வந்தார் (1542-1570). அவர் காலத்தில் பூந்துறைக் கோயில் திருப்பணி செய்யப்பட்டது. அதிகாரிகள் காரியத்துக்குக் கர்த்தச் இராமராசேந்திரர், கந்தாசாரம் திம்மராசையன், இராசேந்திர புரம் சங்கப்பையன் ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். தாராபுரத்தில் சதாசிவராயரின் இரண்டு கன்னடக் கல்வெட்டுக்கள் உள்ளன.

1585ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் சதாசிவராயர் தோல்வியடையவே விசயநகர ஆட்சி வலிமை இழந்தது. மைசூர் உடையார்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்த கடைசி விசயநகர மன்னன் மூன்றாம் சீரங்கள் (1642-1672) 1663இல் மைசூர் தொட்ட தேவராயனுடன் இறுதிப்போரில் தோல்வியுற்று 1663இல் மதுரை சொக்கநாத நாயக்கரிடம் அடைக்கலம் அடைந்தார்.

சொக்கநாத நாயக்கர், செஞ்சி - தஞ்சை மராட்டியத் தலைவர்கள், மதுரை நாயக்கரின் ஈரோடு ஜாகீர்தார் அய்யப்ப நாயக்கன் ஆகியோருடன் தொட்டதேவராயன் தளபதி சிக்கதேவராயனுடன் மூன்றாம் சீரங்கன் ஒரு லட்சம் காலாட்படையோடு ஈரோட்டில் போரிட்டுத் தோல்வியடைந்து இறுதிக் காலத்தில் இக்கேரி சென்ற சீரங்கள் 1672இல் மரணமடைந்தார். முன்னூறு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த விசயநகரப் பேராசில் ஈரோடு மாவட்டப்பகுதி சுமார் 150 ஆண்டுக் காலமே அவர்கள் கையில் இருந்தது.