பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

16. மதுரை நாயக்கர் காலம்


(கி.பி. 1629 - 1708)


கிருஷ்ண தேவராயர் காலத்தில் (1509-1529) விசயநகரப் பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. நாட்டை ஆறு ராஜ்யங்களாகப் பிரித்து ஆறு பிரதிநிதிகளை (நாயகன்) நியமித்தார். மதுரை ராஜ்யத்திற்கு கொட்டியம் நாகம நாயக்கரை ஆட்சியாளராக நியமித்தார்.

நாகமநாயக்கர் வரிப்பணத்தை முறையாகப் பேரரசுக்குச் செலுத்தவில்லை, விசயநகர ஆணைக்கும் அடங்கவில்லை, எனவே கிருஷ்ணதேவராயர் ஆணையால் நாகமநாயக்கர் மகன் விசுவநாத நாயக்கரே தன் தந்தையை வென்று அடக்கி விசயநகரம் கொண்டு சென்றார்.

கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரையே மதுரை ஆட்சியாளனாக நியமித்தார். 1529இல் விசுவநாதன் ஆட்சி மதுரையில் தொடங்கியது. 1738இல் விசயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி மீனாட்சி வரை 13 அரசர்கள் மதுரையை ஆட்சிபுரிந்தனர்.

பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த காரணத்தால் அவர்கள் மீன் சின்னத்தைப் பொறித்துக் கொண்டனர். பெங்களூர் அருங்காட்சியகச் சின்னம் ஒன்றில் மீன்சின்னத்துடன் விசுவநாத பாண்டியன் என்ற வாசகமும் உள்ளது.

விசுவநாத நாயக்கர் (1529-1504)

முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564-1572)

வீரப்பநாயக்கர் (1572-1595}

இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595-1601)

முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (1801-1809)

முதலாம் முத்து வீரப்பநாயக்கர் (1609-1623)