பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

ஈரோடு மாவட்ட வரலாறு


திருமலை நாயக்கர் (1623-1659)

இரண்டாம் முத்துவீரப்பநாயக்கர் (1659)

சொக்கநாத நாயக்கர் (1659-1682)

ஆகியோர் ஆட்சிக் காலங்களில் ஈரோடு மாவட்டப் பகுதி மதுரை நாயக்கர்கட்கு உள்பட்டிருந்தது.

1629ல் மதுரை ஆட்சிக்கு வந்த விசுவநாத நாயக்கர் பேரறிவுமிக்க தன் தளவாய் அரியநாத முதலியார் அறிவுரைப்படி தன் நாட்டை 72 பாளையப்பட்டுக்களாகப் பிரித்தார். அதற்கு மதுரைக் கோட்டையில் 72 கொத்தளங்கள் இருந்ததே காரணம். ஒவ்வொரு கொத்தளமும் ஒவ்வொரு பாளையக்காரர் பொறுப்பில் பாதுகாக்க விடப்பட்டன.

இதனை மெக்கன்சியின் ஆவணம் ஒன்று கீழ்வருமாறு கூறுகிறது.

“பாண்டியன் தேசம் மதுராபுரிக்கு விசுவநாத நாயக்கர் அவர்களுக்குப் பட்டாபிஷேகமானதின் பின்பு தளவாய் அரியநாத முதலியார் அவர்களும் விசுவநாத நாயக்கரும் இருபேருமாக மதுராபுரிக்கு வந்து முன் பாண்டியன் போட்டிருந்த கோட்டையைச் சுற்றி விலாசமாய் 72 கொத்தனத்துடனே கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரரையும் நேமுகம் செய்குறது. திருமஞ்சனவாசலுக்குப் பிரதட்சணமாய் வடக்கு மூலையில் அன்பதாங் கொத்தளம் காக்கச் சொல்லி" என்பது "அம்மைய நாயக்கனூர் ஜமீன்தாரி வம்சாவளி" ஆவணப் பகுதியாகும்.

72 பாளையப்பட்டுக்காரர்களாக ஏற்கனவே இருந்த அவ்வப் பகுதித் தலைவர்களும், விசுவதாதன் படையுடன் வந்த முக்கிய நாயக்கப் படைத் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர்.

"நாகமநாயக்கரவர்கள் குமாரன் விசுவநாத நாயக்கன் படை வெட்டப் போறமுன்னுக்கு எங்களுடைய பெரியவர் பெஞ்சம் நாயக்கரும் எங்கள் சனமும் கூடப் போய்ப் பாளையத்தில் அனேகம்