பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

79

தலைக்கோட்டை யுத்தத்தில் தோல்வியுற்ற விசயநகரம் வலிமை குன்றவே முத்து வீரப்பநாயக்கர் சீரங்கப்பட்டணம் வரை ஈரோடு மாவட்ட வழியாகச் சென்று அங்குள்ள தலைவனிடம் திறைப் பணம் பெற்றுத் திரும்பினார்.

திருமலை நாயக்கர் காலத்தில் (1523-1559) சாமராச உடையார் (1617-1637) டணாயக்கன் கோட்டையைக் கைப்பற்றினார். சாம் பள்ளியையும் முற்றுகையிட்டார். மதுரை நாயக்கருக்கு உட்பட்டிருந்த டணாயக்கள்கோட்டைத் தலைவன் சாமராச உடையாருக்கு 12000 வராகன் திறை செலுத்த ஒப்புக் கொண்டான்.

கண்டீரவ நரசராசா காலத்தில் (1638-1659) திருமலை நாயக்கர் உதவியோடு கெட்டி முதலியார் மைசூரார் பிடித்திருந்த டணாயக்கன் கோட்டை மீது போர் தொடுக்கவே மைசூர் உடையார் 1641 இல் சாம்பள்ளியில் கெட்டி முதலியாரைத் தோற்கடித்து திருச்சி வரை சென்றதாக மைசூர் வரலாறு கூறுகிறது.

கண்டீரவ நரசராசாவின் தளபதி ஹம்பையன் மீண்டும் ஈரோட்டுப் பகுதிக்குப் படை எடுத்து வந்தான். திருமலை நாயக்கர் நோய்வாய்ப்பட்டிருந்த போது இப்போர் நடந்தது. மைசூர்த் தளபதி ஹம்பையன் ஈரோட்டுப் பகுதியில் தோல்வியுற்ற மதுரை நாயக்கர் படையை மூக்கரிய அரசன் கண்டீரவன் ஆணையிட ஹம்பையனோ இளையோர், முதியோர். பெண்கள், சிறுவர், சிறுமியர் மூக்குகளையும் அரிந்து கண்டீரவுனுக்கு அனுப்பி வைத்தான். வரலாற்றில் இது "ஈரோடு மூக்கறுப்புப் போர்" என்றே கூறப்படுகிறது.

இது பொறுக்காத திருமலை இரகுநாத சேதுபதியை வேண்ட அவர் 25000 வீரரோடு வந்து மைசூர்ப் படையை ஈரோட்டில் தோற்கடித்தார். தொடர்ந்து மைசூரின் மீது படை நடத்திச் சென்ற திருமலையின் இளைய சகோதரர் குமாரமுத்து நாயக்கர் சீரங்கப் பட்டணம் வரை சென்று பழிக்குப் பழி மைசூரார் மூக்குகளை அரிந்தார்.

மைசூர் உடையார் மரபில் தொட்ட தேவராயர் (1659-1673) பட்டத்திற்கு வந்தார். அப்போது நாடிழந்த விசயநகர மன்னன்