பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஈரோடு மாவட்ட வரலாறு

மூன்றாம் சீரங்கன் மதுரை சொக்கநாத நாயக்கரிடம் (1659-1682) அடைக்கலம் புகுத்திருந்தான். சொக்கநாத நாயக்கர் சீரங்கன் வேண்டுகோள்படியும், மைசூரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் செஞ்சி, தஞ்சை மராட்டியத் தலைவர்கள், ஈரோடு அய்யப்ப நாயக்கன் ஆகியோர் துணையோடு ஒரு லட்சம் பேர் கொண்ட பெரிய கூட்டுப் படையோடு தொட்ட தேவராயனை எதிர்க்க முற்பட்டார். மைசூர்த் தளபதி சிக்கதேவராசனிடம், மதுரைத் தளவாய் லிங்கம நாயக்கன் 1672ல் ஈரோட்டில் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தான். விசயநகர மன்னன் இக்கேரிக்கு ஓடி விட்டான், மதுரை நாயக்கரும் அழிவின் விளிம்பைத் தொட்டனர்.