பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

17. மைசூர் உடையார் காலம்


(கி.பி. 1617-1766)


விசயநகர ஆட்சியின் கீழ் மைசூர் ஹடதனா பகுதிக் கிராமங்களை நிர்வாகம் செய்து வந்த யதுராயன் அல்லது விசயராயன் (1399- 1424) வழிவந்த நான்காம் சாமராச உடையார் (1572-1578) மகன் ராச உடையார் (1578-1617) விசயநகர ஆட்சிக்குக் கப்பம் செலுத்தாமல் தனி மைசூர் உடையார் அரச மரபை ஏற்படுத்தினார்.

அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசர்களில்,

சாமராச உடையார் (1617-1637)

முதலாம் கண்டீரவ நரசராச உடையார் (1635-1659)

கெம்பதேவன் என்ற தொட்ட தேவராச உடையார் (1659-1673)

சிக்க தேவராச உடையார் (1673-1704)

முதலாம் கிருஷ்ணராச உடையார் (1714-1732)

இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734-1766) ஆகியோர் தொடர்பு ஈரோடு மாவட்டத்தோடு உள்ளது.

மைசூர் உடையார்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் மதுரை நாயக்கருக்கும் தெற்கே தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப முயன்ற மைசூராருக்கும் இடையில் ஈரோடு மாவட்டப்பகுதி சுமார் நூறாண்டுகளுக்கு மேல் போர்க்களமாகவே மாறியது.

டணாயக்கள் கோட்டைத் தலைவன் மதுரை நாயக்கர் சார்பில் நிர்வாகம் செய்து வந்தான். சாமராச உடையாரின் தளவாய் மல்லராசய்யா படையுடன் சென்று மதுரைப் படையை வென்று டணாயக்கன் கோட்டையைக் கைப்பற்றினான். டணாயக்கன் கோட்டைத் தலைவன் வேறு வழியின்றி ஆண்டுக்கு பன்னிரண்டாயிரம் வராகன் சுப்பம் செலுத்துவதாகக் கூறி தன் நிர்வாகத்தைத் தொடர்ந்தான்.

மைசூராரின் டணாயக்கன் கோட்டை வெற்றியைக் கண்டு அஞ்சிய மதுரை நாயக்கர்கள் மைசூருக்கும் தெற்கிலும் மேற்கிலும்