பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஈரோடு மாவட்ட வரலாறு

இருந்த சிற்றரசகளை மைசூருக்கு எதிராக கூட்டாக அணிவகுக்கத் தூண்டினர்.

ஹெக்கடதேவனகோட்டைத் தலைவன், கட்டெ மல்லலவாடித் தலைவன் கோபால ராசய்யா, இக்கேரி சதாசிவ நாயக்கனின் படைத் தலைவன், சென்னபட்டணம் செகதேவராயன் படைத்தலைவன் ஆகியோரோடு டணாயக்கன் கோட்டைத் தலைவனும் மதுரைக்கு ஆதரவாகக் கூட்டணியில் சேர்ந்தான். ஆனால் சத்யகயா, ஹசரா ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களின் கூட்டணித் தலைவர்களின் படையை மைசூர்ப்படை மிக எளிதில் வெற்றி கொண்டது.

1825-27 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இப்போர் மூலம் மைசூர்ப்படைக்கு மிக அதிகமான அளவில் யானைகள் கிடைத்தன. மதுரை, இக்கேரி நாயக்கர்கட்கு இது பெரிய அதிர்ச்சியைத் தந்தது. தோற்ற தலைவர்கள் மைசூருக்கு மிகுதியான கப்பப்பணமும் தந்தனர்.

பீஜப்பூர் கல்தான் முகம்மது அடில் ஷா வடக்கிலும், மதுரை திருமலை நாயக்கர் தெற்கிலும் மைகுருக்குப் பெரும் சவாலாக விளங்கினர். மதுரை நாயக்கரின் பெரும் படையோடு 1641ஆம் ஆண்டு தாரமங்கலம் கெட்டி முதலியின் மூத்தமகன் பெத்தடய்யன் மைசூரின் மீது போர் தொடுத்தான். இன்று மேட்டூர் அணைக்குள் மூழ்கிவிட்ட காவேரிபுரம் கணவாய் வழியாக வந்த கண்டீரவனின் தளபதி ஹம்யையன் மதுரைப் படையை மாறதள்ளி, சாம்பள்ளி ஆகிய இடங்களில் நிர்மூலமாக்கி ஈரோடு மாவட்டப் பகுதியைக் கைப்பற்றினான். மைசூர்ப்படை ஈரோடு கோட்டையில் நிலையாகத் தங்கியது. 1854ஆம் ஆண்டு ஹம்பையன் ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயிலுக்குத் திருப்பணி செய்து துவார பாலகர்களைச் செய்தளித்ததாக ஈரோட்டிலுள்ள கன்னடக் கல்வெட்டுக் கூறுகிறது.

மைசூர் உடையாரிடம் தோல்வியடைந்து கடைசி விசயநகர மன்னன் மூன்றாம் சீரங்கன், மதுரை சென்று சொக்கதாத நாயக்கர் ஆதரவில் இருந்தான். மைசூராரை எதிர்க்கவும், விசயநகர அரசை மீண்டும் நிறுவவும் சொக்கநாத நாயக்கர் உதவியைச் சீரங்கன் வேண்டினான்.