பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஈரோடு மாவட்ட வரலாறு

பொம்மை அரசருக்கு ஆசை வார்த்தை கூறி 1761 வாக்கில் தானே முழு அதிகாரத்தையும் மேற்கொண்டார். மைகுருக்கு உட்பட்டிருந்த ஈரோடு மாவட்டப்பகுதி முழுவதும் 1781இல் ஐதர் அலியின் அதிகரத்தின் கீழ் வந்துவிட்டது.

போர்ச் செலவுகளுக்காகவும் படையெடுத்து வருபவர்களுக்குப் பல லட்சம் பகோடாக்கள் கொடுத்துத் திருப்பி அனுப்புவதற்காகவும் மக்களிடம் கசக்கிப் பிழிந்து ஐதர் அலியின் அதிகாரிகள் வரிவசூல் செய்தனர்.

பழைய கோட்டைப் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரையார் "காசுமேல் ஆசையாம் ஐதர் அலிகான் சாயபு" என தன் பாடலில் கூறியுள்ளார். ஐதர், திப்பு நாளில் பல ஆவணங்கள் ஈரோடு மாவட்டப் பகுதியில் எழுதப்பட்டன, ஈரோடு மாவட்டப்பகுதி மக்கள் அவர்களிருவரும் மைசூர் அரசர் சாமராச உடையார் (1772-1798) சார்பில் ஆட்சி செய்வதாகவே எண்ணினர்; எழுதினர்.

"உபயகாவேரி மத்திய அரங்கமான சீரங்கப்பட்டணத்
தில் ரத்தினசிம்மாசன ரூடராய் சாமராஜஉடையார்
அய்யன் அவர்கள் பிருத்விராஜ்யம் பண்ணுகிற
நாளையில் அவர்கள் காரியத்துக்குக் கர்த்தராகிய
டிப்பு சுலுத்தான் பாட்சா சாயுபு அவர்கள்"

என்றே விசயமங்கலம் 'கபிலமலை' பட்டாலி ஆவணங்கள் கூறுகின்றன.

ஐதர், திப்பு ஆட்சியில் 10 முதல் 20 கிராமங்கள் அடங்கிய தாலுக்காப் பகுதி ஒவ்வொரு 'அமுல்நார்' பொறுப்பில் விடப்பட்டது. அவருக்கு சேனடாகம், சிரஸ்ததார் ஆகியோர் துணைபுரிந்தனர்.

ஊர் - அமுல்தார் - சேனபாகம் - சிரஸ்தநார்

விசயமங்கலம் - மம்முதலி - அண்ணய்யன் - வெங்கிட்டய்யன்

ஊத்துக்குளி - கான்சாகிபு - சுப்பய்யன் - சேஷகிரி அய்யன்

அறச்சலூர் - அமானுல்லாகான் - கோபாலகிருஷ்ணய்யன்-கண்ணய்யன் என்பன சில தாலுக்கா அதிகாரிகளின் பெயர்கள்.