பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஈரோடு மாவட்ட வரலாறு

காங்கயம் பல்லவராயர் வம்சாவளி பின்வருமாறு கூறுகிறது. "அரமனையார் கட்டளைப்படிக்கு பணம் செலுத்திக்கொண்டு இருக்கும் நாளையில், திப்பு சுல்தான் அவர்கள் அரமனைக்குப் பணம் செல்லவில்லையென்று துராக்கிரதமாய் சிதம்பரப் பல்லவராயக் கவுண்டர் அவர்களையும் அவர் குமாரன் அமராவதிப் பல்லவராயக் கவுண்டர் அவர்களையும் சங்ககிரியிலே கைது வச்சுயிருந்து அதற்குமேல் சீரங்கப்பட்டணத்துக்குத் தரிவிச்சு விசாரணை செய்து விடுதலை பண்ணின சமயத்தில் சிதம்பரப் பல்லவராயக்கவுண்டச் தெய்வகதி அடைந்தார்".

வரி கொடுக்காத அக்கிரகாரங்கள் ஜப்தி செய்யப்பட்டு வரியுடன், ஜப்திவரியும் சேர்த்து வசூலிக்கப்பட்டது. பவானி அருகில் உள்ள ஆண்டிருளம் அக்கிரகாரத்தார்,

"டிப்பு நாளையில் சோபகிறிது வருஷத்தில் அக்கிர
காரம் செபுதியாச்சது. செபதிவரி கண்டிராயன் பணம்
96 பொன்மேரைக்கு சோபகிறிது வருஷம் முதல்
காலயுத்தி வருஷம் வரைக்கும் குடுத்து வந்தோம்".

என்று கூறுகின்றனர். இடைவிடாமல் ஏற்பட்ட போர்களின் மிகுதியான செலவாலும், சில சமயம் போரைத் தவிர்க்க அளிக்கப்பட்ட பெரும் தொகையாலும் இவ்வாறு வரிவசூல் செய்ய நேரிட்டது.

ஈரோடு மாவட்டம் காவேரிபுரம் கணவாய் வழியாக 1800ஆம் ஆண்டு இரண்டு மாதங்களில் புகையிலையை 300 காளைகளும், நெய்யை 70 காளைகளும், துணிகளை 50 காளைகளும், கருப்பட்டி - வெல்லத்தை 50 காளைகளும், எண்ணை வகைகளை 10 காளைகளும், பாத்திரங்களை 5 காளைகளும் ஏற்றிக் கொண்டு சென்றதாக புக்கானன் கூறுகிறார். ஐதர் நாட்களில் இதைப்போலப் பத்துமடங்கு சென்றதாம்.

மதுரை நாயக்கருக்கும் மைசூர் உடையாருக்கும் நடைபெற்ற இடைவிடாத போர்களில் ஈரோடு மாவட்டம் அலைக்கழிக்கப்பட்டது போல ஐதர், திப்புவிற்கும் கும்பினிப்படைக்கும் அவர்கட்கு ஆதரவாக