பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஈரோடு மாவட்ட வரலாறு


"ஆர்டீசு நுரையவர்கள் துரைத்தனத்தில் சீரங்கப்பட்டணத்தின் பேரிலே கும்பினியாரவர்கள் தண்டு போற போது என்னையும் என்னுடைய சனத்தையும் வரச்சொல்லி உத்தரவாகி நானும் என் சனம் அறு நூறு சனம் வரைக்கும் சேவுகம் செய்தோம்" என்பன கொங்குப்பாளையக்காரர்கள் ஆவணப்பகுதிகளாகும்.

படை உதவியுடன் கம்பெனியின் எதிரிகளைக் காட்டிக் கொடுத்தும் பாராட்டும் பரிசும் கும்பினியாரிடம் சிலர் பெற்றனர்.

"துரையள் உத்தரவுப்படிக்கு விருப்பாட்சி லட்சும நாயக்கனைப் பிடிச்சுக் கொண்டு வந்து துரையன் சன்னிதானத்திலே கொண்டு வந்து ஒப்புவிச்சபடியினாலே மகா.ரா.ரா.ஸ்ரீ கிரீம் துரையவர்கள் என் பேரில் கடாட்சம் செய்து வெகுமதி பண்ணி 500 புலி வராகன் இனாம் கொடுத்தார்கள்" என்பது ஒரு கொங்குப்பாளையக்காரர் கூற்று.

தீரன் சின்னமலையைப் பிடிக்க ஒரு பாளையக்காரர் முயற்சி செய்துள்ளார்.

"சனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து முச்சடையாண்டிக் கவுண்டனையும் அவனுக்குக் குமுக்கா இருக்கப்பட்ட தம்பாக்கவுண்டனையும் கைப்பிடியாகப் பிடிக்க வேணுமென்று நினைச்சவிடத்தில் தப்பிவிச்சுக் கொண்டு ஓடிப்போய் விட்டார்கள்" என்று ஒரு பாளையக்காரர் கூறுகிறார்.

திப்புவின் வீழ்ச்சிக்குப்பின் எல்லாப் பாளையக்காரர்களும் பத்தில் ஏழுபங்கு வரிப்பணத்தைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்ட கும்பினியார் ஐதர். திப்புவை விட வசூலில் வெகு கண்டிப்பாக இருந்தனர். மக்கள் சாவினால், காய்ச்சல் முதலிய நோயால், பலர் ஓடிப்போவதால், வெள்ளத்தால், வறட்சியால் வரிவசூல் குறைவு ஏற்பட்ட போதும் வரியைக் குறைக்கவில்லை. பாளையத்தை ஜப்தி செய்து பாளையக்காரரை சிறைவைத்தனர்.

"ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருவன் போட்டானாம் வெள்ளிரிக்காய் காசுக்கு ரண்டு விக்கச்சொல்லி காகிதம் போட்டானாம்.