பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 1.21 (3ஆ) இது போல் வலது காலிலும் செய்யவும். (10ഗ്രങ്ങത്തു. - 2 - 4. முதலில் மல்லாந்து படுக்கவும். கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்க வேண்டும். கால்களை நேராக மேற்புறமாக உயர்த்தி விடவும். முழங்கால்கள் வளையாமல் விறைப்பாக இருப்பது போல் வைத்து, நிமிர்த்தி உயர்த்தி வைத்து, பிறகு கால்களைத் தரைக்குக் கொண்டு வரவும். (10 தடவை) 5. மல்லாந்து படுத்துக் கொண்டு, கால்களை மேற்புறமாக உயர்த்தி, சைக்கிள் பெடலை மிதித்து சுழற்றுவது போல், மேலேயே சுழற்றவும், பிறகு தரைக்குக் கொண்டு வரவும். (10 முறை) 6. மல்லாந்து படுத்தபடி, கால்களை முன்புறமாக விறைப்பாக நீட்டி வைத்து கொண்டு, மேலும் கீழும் இடது காலும் வலது காலும் போய் வருவது போல, ஏற்றி இறக்கிச் செய்யவும். (10 முறை)