பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 9 முதல் பகுதி - விளக்கம் 1. எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்? எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்? இந்தக் கேள்வியை எல்லோருமே கேட்கின்றனர். தனிமையாக இருக்கும் பொழுதுகூடத் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். ஏளனமாகக் கேட்பவர்கள் இருக்கின்றார்கள். ஏனோ தானோவெனக் கேட்பவர்களும் உண்டு. இாண்டுங் கெட்டவர்களோ ஏராளம். கேட்கும் கேள்வியில், முறைகள் எத்தனையோ இருந்தாலும், கேட்பவர்களுக்குக் கிடைக்கின்ற விடை ஒனறுதான.